முகப்பு /செய்தி /உலகம் / நிலவுப் பயணத்துக்கு நிலத்தில் ஒத்திகை.. எரிமலையில் நடமாடிய ரோவர்

நிலவுப் பயணத்துக்கு நிலத்தில் ஒத்திகை.. எரிமலையில் நடமாடிய ரோவர்

நிலவுப் பயணத்துக்கு நிலத்தில் ஒத்திகை.. எரிமலையில் நடமாடிய ரோவர்..

நிலவுப் பயணத்துக்கு நிலத்தில் ஒத்திகை.. எரிமலையில் நடமாடிய ரோவர்..

மீண்டும் நிலவைத் தொடவிருக்கும் நாசா தனது ஆர்ட்டிமிஸ் திட்டத்திற்காக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நிலவின் தரைப்பரப்பில் நடமாட இருக்கும் ரோவருக்கு நிலத்தில் பயிற்சி நடத்தி சோதித்திருக்கின்றனர் ஐரோப்பிய விண்வெளி மைய விஞ்ஞானிகள். எட்னா மலைப்பரப்பில் நடந்த எதிர்காலத்திற்கான சோதனைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

மலை முகடுகள், பெரும்பள்ளங்கள், கரடுமுரடான தரைப்பரப்பு என பரந்து விரிந்திருக்கும் இந்தப் பகுதி ஏதோ வேற்று கிரகத்தில் படம் பிடிக்கப்பட்டதல்ல. இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள எட்னா மலைப்பகுதி தான் இந்த ஏலியன் நிலப்பரப்பு. மீண்டும் நிலவைத் தொடவிருக்கும் நாசா தனது ஆர்ட்டிமிஸ் திட்டத்திற்காக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த இருக்கிறது.

நிலவிலோ, செவ்வாயிலோ நகர்ந்து கொண்டிருக்கும் ரோவரை பூமியில் இருந்து இயக்குவது சற்றே சிரமமானது. இதனை கருத்தில் கொண்ட நாசா, ஐரோப்பிய விண்வெளி மையத்துடன் இணைந்து நிலவின் சுற்றுப்பாதையில் கேட்வே ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதாவது நிலவின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றி வரும் ஒரு விண்கலத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள், நிலவின் மேல் நகர்ந்து கொண்டிருக்கும் ரோவரை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கேட்வே அமைய உள்ளது.

இதற்காக ஐரோப்பிய விண்வெளி மையம் உருவாக்கிய ரோவர், ஹேப்டிக் ஃபீட்பேக் எனப்படும் உணர் திறன் கொண்டது. இந்த ரோவர் எங்காவது ஒரு கல்லில் முட்டி நின்றால் அதனை தொலை தூரத்தில் இயக்குபவரும் உணர முடியும். இதனை சோதிக்க விரும்பிய விஞ்ஞானிகள், எட்னா மலையில் ரோவரை இறக்கி விட்டனர். அங்கிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்டானியா நகரில் ஒரு அறையில் இருந்து இயக்கி ரோவர் பரிசோதிக்கப்பட்டது.

இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெறும் நிலையில், விண்வெளி ஆய்வுகளின் அடுத்த கட்டத்தை எட்டிப் பிடிக்கலாம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள். ஒரு அந்நிய கிரகத்தின் மண்ணுக்கு மனிதனை அனுப்புவதைக் காட்டிலும் ரோவரை அனுப்பி அதனைப் பற்றி அறிந்து கொள்வது சிறப்பானது என கூறுகின்றனர். பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையம் போல நிலவைச் சுற்றும் ஒரு ஆய்வு மையம் அமைந்தால் நிலவில் மனித சஞ்சாரம் வெகு விரைவில் சாத்தியமாகும்.

First published:

Tags: Italy