உலகின் முதல் தாவர எண்ணெய் சார்ந்த பிளாஸ்டிக்கை உருவாக்கிய ஜெர்மன் விஞ்ஞானிகள்!

தாவர எண்ணெய் சார்ந்த பிளாஸ்டிக்

ஜெர்மன் விஞ்ஞானிகளின் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத புதிய பிளாஸ்டிக் பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

  • Share this:
காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, அதிக வெப்பம் என சுற்றுச்சூழலைப் பற்றிய வளர்ந்து வரும் கவலைகளில் மற்றொரு முக்கியமான கவலை என்னவென்றால் அது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தான். தற்போது, உலகம் எங்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த தயாரிப்புகள் மலிவானவை மற்றும் பயன்படுத்த மிகவும் பயனுள்ளவை என்றாலும், அவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஜெர்மன் விஞ்ஞானிகளின் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத புதிய பிளாஸ்டிக் பொருளை கண்டுபிடித்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தாவர எண்ணெய் அடிப்படையிலான பிளாஸ்டிக்கை 10 முறை வரை மறுசுழற்சி செய்யலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிளாஸ்டிக் ஜெர்மனியில் உள்ள கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொருட்கள் அறிவியல் துறைத் தலைவரான ஸ்டீபன் மெக்கிங்கால் உருவாக்கப்பட்டது. புதிய பிளாஸ்டிக் பொருளின் செயலாக்கத்தை எளிதாக்கும் வகையில் இது மூலக்கூறு அளவில் வடிவமைக்கப்பட்ட பிரிந்த புள்ளிகளைக் கொண்டுள்ளது. ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த பிளாஸ்டிக் தாவர எண்ணெய்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதே கண்டுபிடிப்பை மிகவும் தனித்துவமானதாக மாற்றியுள்ளது. இது தற்போதுள்ள புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான பிளாஸ்டிக்குகளுக்கு சுற்றுச்சூழல் நட்பு மாற்றாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாவல் பிளாஸ்டிக் ஒரு கலவை பிணைப்பைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இதனை எளிதில் பிரிக்க முடியும். மேலும் மறுசுழற்சி செயல்முறையை இது எளிதாக்குகிறது.பொதுவாக பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்கான செயல்முறையானது, அதை துண்டுகளாக பிரித்து புதிய பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்கப் பயன்படும் சிறிய துகள்களாக மாற்றுவதை உள்ளடக்கியது. இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக மறுசுழற்சி செய்வதற்கான ஒரு வேதியியல் செயல்முறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது பிளாஸ்டிக் பாலிமரின் நீண்ட சங்கிலியை கரைப்பான் மூலம் உடைக்கக்கூடிய ஆய்வை பற்றியது.

இருப்பினும், அதன் மூலக்கூறு கட்டமைப்பில் கார்பன்-டு-கார்பன் பிணைப்புகள் வலுவானதாக இருப்பதால் வேதியியல் மறுசுழற்சி தொடர்பான ஆய்வு அதன் சொந்த சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த பிணைப்புகளை உடைக்க, டன் கணக்கில் வெப்பம் தேவைப்படுமாம். எடுத்துக்காட்டாக, மோனோமர்களை அணுகுவதற்காக கார்பன் பிணைப்புகளை உடைக்க 600 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. இது பின்னர் வேதியியல் ரீதியாக 10 சதவீதத்திற்கும் குறைவான விகிதத்தில் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

Also Read : சோ க்யூட்..குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா ?

தற்போது இந்த புதிய பிளாஸ்டிக் மூலம், சிறந்த முடிவு விகிதத்துடன் மறுசுழற்சி செயல்முறை எளிதாகிவிடும். ஆய்வின் போது, ​​ஆராய்ச்சியாளர்கள் பாலியஸ்டர் மற்றும் பாலிகார்பனேட் வடிவங்களை கொண்ட இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பயன்படுத்தினர். அவை இரு வெவ்வேறு நிலைகளில் எத்தனால் மற்றும் மெத்தனால் மீது உபயோகப்படுத்தப்பட்டன. அதாவது முதலில் 120 டிகிரி வெப்பத்தில் ஒரு வினையூக்கியுடன், பின்னர் 150 டிகிரி செல்சியஸில் வினையூக்கி இல்லாமல் பயன்படுத்தப்பட்டன.மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பின்னர் குளிரவைக்கப்பட்டு வடிகட்டப்பட்டது. மேலும் பாலிகார்பனேட் விஷயத்தில் 96 சதவீத அசல் பொருளை ஆராய்ச்சியாளர்களால் மீட்டெடுக்க முடிந்தது. இந்த புதிய பிளாஸ்டிக்கின் மறுசுழற்சி செயல்முறை பிளாஸ்டிக் சாயம் அல்லது கலப்படங்கள் இருந்தாலும்கூட செயல்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

புதிய பிளாஸ்டிக் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக்கோடு பொருந்தக்கூடிய பல அம்சங்களுடன் பாலிதீன் போன்ற அடர்த்தியைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இதை சிறந்த பயனுள்ள விகிதத்தில் எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இருப்பினும், இந்த தாவர எண்ணெய் அடிப்படையிலான பிளாஸ்டிக் பொதுவாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் பின்னடைவு அம்சமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், வேதியியல் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் பொதுவான எத்திலீனை விட இது விலை அதிகம். மேலும் தொழில்களை ஒரு விலையுயர்ந்த பிளாஸ்டிக் மாற்றுகளுக்கு மாறுவது என்பது மிக கடினம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: