23 ஆண்டுகளுக்கு முன் சிறுமி கொலை... 900 ஆண்களிடம் டி.என்.ஏ சோதனை நடத்திய போலீசார்...!

23 ஆண்டுகளுக்கு முன் சிறுமி கொலை... 900 ஆண்களிடம் டி.என்.ஏ சோதனை நடத்திய போலீசார்...!
News18
  • News18
  • Last Updated: November 25, 2019, 7:27 AM IST
  • Share this:
ஜெர்மனியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு 11 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க 900 ஆண்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

1996-ம் ஆண்டு மே மாதம் கிரீவன்பிராய்ச் நகரத்தில் இருந்து கிளாடியா ரூஃப் என்ற சிறுமி கடத்தப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அங்கிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் சிறுமியின் உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. பாலியல் வன்கொடுமை செய்து கிளாடியா கொல்லப்பட்ட சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது.

ஆனால் அந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறி வந்தது. இதையடுத்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பகுதியில் வசிக்கும் 900 ஆண்களின் டிஎன்ஏ மாதிரிகளை சோதனை செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறை முடிவு செய்தது.


ரூஃப் கொல்லப்பட்ட சமயத்தில் 14 வயது முதல் 70 வயது வரையுள்ள ஆண்களை டிஎன்ஏ சோதனைக்கு முன்வரும்படி காவல்துறை கேட்டுக் கொண்டது. அதன்படி காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனையில் பலர் பங்குபெற்றனர்.

 
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்