பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் தகவல்கள் ’ஹேக்’ - சிக்கலில் ஜெர்மன்

ட்விட்டரில் லீக் ஆன பல முக்கிய பிரமுகர்களின் தகவல்கள் குறித்து ஜெர்மன் அரசு விசாரணையத் தொடங்கி உள்ளது.

Web Desk | news18
Updated: January 5, 2019, 11:09 AM IST
பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் தகவல்கள் ’ஹேக்’ - சிக்கலில் ஜெர்மன்
ஏஞ்சலா மெர்கெல்
Web Desk | news18
Updated: January 5, 2019, 11:09 AM IST
ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உள்ளிட்டப் பல முக்கிய ஜெர்மன் அரசியல் தலைவர்களின் சுய தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு ட்விட்டர் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெர்மனின் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டு முகவரிகள், மொபைல் நம்பர்கள், கடிதங்கள், இன்வாய்ஸ் கோப்புகள் எனப் பல கோப்புகள் எனப் பல முக்கியத் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவலை தற்போதுதான் ஜெர்மன் அரசு வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் லீக் ஆனதா அல்லது அரசியல் தலைவர்களை நோக்கிக் குறிவைத்து திட்டனிட்டப்படி ஹேக் செய்யப்பட்டதா?என்பது குறித்து இன்னும் ஜெர்மன் அதிகாரிகள் எந்தத் தெளிவுரையும் வழங்கவில்லை.

“சுய தகவல்கள் உட்பட பல அலுவலக ரீதியானத் தகவல்களும் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. இதில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் தகவல்கள் உள்ளன” என ஜெர்மன் அரசு செய்தித்தொடர்பாளர் மார்டினா ஃபியட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏஞ்சலா மெர்கெல் குறித்து வெளியானத் தகவல்களில் எதுவும் முக்கியமானது இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: நியூஸ்18 தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் மு.குணசேகரனுக்கு ஊடகத்துறையின் உயரிய விருது!
First published: January 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...