Home /News /international /

444 கிறிஸ்துமஸ் மரங்களை கொண்டு வீட்டை ஒளிரச் செய்த ஜெர்மன் தம்பதி.. உலக சாதனையில் இடம்!

444 கிறிஸ்துமஸ் மரங்களை கொண்டு வீட்டை ஒளிரச் செய்த ஜெர்மன் தம்பதி.. உலக சாதனையில் இடம்!

444  கிறிஸ்துமஸ் மரம்

444 கிறிஸ்துமஸ் மரம்

ஒரு ஜெர்மன் ஜோடி தங்களது வீட்டில் சுமார் 444 கிறித்துமஸ் மரங்களை வைத்து சாதனை படைத்துள்ளனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே உலகின் பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை காலம் ஆரம்பித்தாலே வீடுகள் மற்றும் நகர வீதிகளில் வண்ண விளக்குகள் அலங்காரங்கள் ஜொலிக்கும். கிறித்துமஸ் பண்டிகையின் போது ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் கிறித்துமஸ் மரங்களை வைத்து அதில் பல வண்ண விளக்குகள் மற்றும் பொருட்களை கொண்டு அலங்காரம் செய்து வைப்பர்.

ஆனால் இங்கு ஒரு ஜெர்மன் ஜோடி தங்களது வீட்டில் சுமார் 444 கிறித்துமஸ் மரங்களை வைத்து சாதனை படைத்துள்ளனர். மரம் சேகரிப்பாளர்களான தாமஸ் மற்றும் சூசன் ஜெரோமின் என்ற ஜெர்மன் தம்பதி தங்களது 105 சதுர அடி வீட்டை 444 கிறிஸ்துமஸ் மரங்கள், ஃபேரி விளக்குகள் மற்றும் சுமார் 16,000 பாபிள்களால் அலங்கரித்துள்ளனர். இந்த ஜோடியின் சேகரிப்பு மிகவும் பிரமாண்டமானது. மேலும் இத்தனை மரங்களை அலங்காரம் செய்ய அவர்களுக்கு சுமார் எட்டு வாரங்கள் எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்கள் வீட்டில் அலங்கரிக்கப்படாத ஒரே அறை அவர்களின் படுக்கையறை மட்டுமே என்று சுசான் ஜெரோமின் கூறியுள்ளார். ஏனெனில் "நமக்கு கிறிஸ்மஸ் போதுமானதாக இருக்கும் போது இது எங்கள் ரீட்ரீட் பண்டிகைக்கு உதவியாக இருக்கும் என்று சுசான் கூறியுள்ளார்.



இந்த நிலையில் ரியூட்டர்சில் வெளியான அறிக்கையின்படி, இந்த ஜோடி ஒரே இடத்தில் அதிக கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரித்ததற்காக உலக சாதனை படைத்தவர்கள் என்று சான்றளிக்கப்பட்டது. மேலும், இதனை அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதற்கு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

 



 

இருப்பினும், எல்லோரும் அவர்களின் சாதனையால் ஈர்க்கப்படவில்லை. ஒரு யூசர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்ததாவது, "சாதனைகள் வித்தியாசமாக இருக்கலாமே தவிர, மோசமானதாக அவசியமில்லை. அது வருத்தமாக இருக்கிறது. ஒரு முழு காடுமே மற்றவர்களின் கவனத்திற்கான ஒரு வீட்டில் இருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது.



மரங்களின் வாழ்வு எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு மரத்திற்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால் அவர்கள் முற்றிலும் முட்டாள்தனமாக மரங்களை வெட்டுகிறார்கள்." என்று விமர்சனம் செய்தார். இது சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு கடுமையான தீங்கு விளைவிக்கும் என்பது பற்றிய உரையாடலைக் கொண்டுவருகிறது.



கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சிறப்பு சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கும்.



உலக நாடுகளில் கொண்டாடப்படுவது போலவே, இந்தியாவிலும் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்களது வீட்டில் குடில்கள் அமைத்து இயேசு பிறப்பை பொம்மைகளால் அலங்கரித்திருப்பார்கள். அதேபோல ஒவ்வொரு வீட்டிலும் ஸ்டார் லைட் கட்டப்பட்டிருக்கும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Christmas, Christmas eve, Christmas tree, Germany

அடுத்த செய்தி