‘கர்ணம் தப்பினால் மரணம்’ என்பது சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கையில் 100 சதவீதம் மெய்யான ஒன்று. சர்க்கஸ் பார்ப்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பம் தான். நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் நடத்தப்படும் சர்க்கஸ் சாகசங்கள் சில சமயங்களில் மறக்க முடியாத பயங்கர அனுபவங்களையும் தருவது உண்டு. சாகச நிகழ்ச்சியை செய்து காட்டும் சர்க்கசஸ் கலைஞர்கள், நம்முடைய மகிழ்ச்சிக்காக தங்களுடைய உயிரை பயணம் வைக்கிறார்கள். இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தையே உலுக்கி எடுத்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி ஜெர்மனியின் டுயிஸ்பார்க் பகுதியில் உள்ள FlicFlac சர்க்கஸ் குழுவின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அப்போது ஒரு பலகையில் இருந்து மற்றொரு பலகைக்கு திறமையான சர்க்கஸ் கலைஞரும், தொழில்முறை ஸ்கேட்டருமான லூகாஸ் மாலேவ்ஸ்கி தாவ முயன்றார். அப்போது அவருடைய ரோலர் பிளேடில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, எதிர்முனையில் இருந்த உயரமான மேடையை பிடிக்க முடியாமல், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் 20 அடி உயரத்தில் இருந்து லூகாஸ் மாலேவ்ஸ்கி தவறி விழும் காட்சியைக் கண்ட சக ஊழியர்கள், அவரை விரைவாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
டெய்லி மெயில் வெளியிட்டுள்ள தகவலின் படி, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லூகாஸ், ஆபத்தான காயங்கள் எதுமின்றி உயிர் தப்பியதாகவும், இருப்பினும் மணிக்கட்டில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ALSO READ | 14 அடி நீள கொடிய ராஜநாகத்தை வெறும் கையில் அசால்ட்டாக பிடித்த நபர்!! - வீடியோ
‘எனக்கு விலா எலும்புகள், இடுப்பு, தோள்பட்டையில் அடிபட்டுள்ளது. ஒரு கார் என் மீது மோதியது போல் உணர்ந்தேன். ஆனால் நான் நன்றாக இருக்கிறேன், நான் உயிருடன் இருக்கிறேன்,” என லூகாஸ் தெரிவித்துள்ளார்.
சக ஸ்கேட்டரான ஜோ இதுபற்றி கூறுகையில், லூகாஸுக்கு அடுத்ததாக தான் அடுத்த ஜம்பை செய்ய வேண்டி இருந்ததாகவும், அதற்காக தயாரிக்கொண்டிருந்த போது பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து, லூகாஸ் கீழே தவறி விழுந்துவிட்டதை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியிலும் இதே சர்க்கஸில் உயரத்தில் இருந்து தவறி விழுந்த இரண்டு சர்க்கஸ் கலைஞர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
ALSO READ | சீன நாட்டின் பாரம்பரிய வசந்தகால புத்தாண்டை வரவேற்க தயாராகும் பிரமாண்ட ஏற்பாடுகள்!
தான் மாடிக்கு சென்று தனது அடுத்த தாவலை முயற்சிக்கிறேன் என்று கூறினார். அறிக்கையின்படி, ஒரு நிகழ்ச்சியின் போது உயரத்தில் இருந்து விழுந்து இரண்டு ஆண்கள் சிறு காயங்களுக்கு ஆளான மற்றொரு சம்பவத்தை சர்க்கஸ் ஜனவரி மாதம் கண்டது.
இதில் 20 அடி உயரத்தில் இருந்து லூகாஸ் மாலேவ்ஸ்கி தவறி விழும் காட்சிகள் அங்கிருந்த பார்வையாளர்களால் படம் பிடிக்கப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம், ரஷ்யாவில் சர்க்கஸ் நேரலை நிகழ்ச்சியின் போது பயிற்சியாளர் ஒருவர் சர்க்கஸ் சிங்கத்தால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிங்கம் கட்டுப்பாட்டை இழந்து பயிற்சியாளரின் மீது பாய்ந்து பலமுறை கடித்த காட்சிகள் அனைவரையும் மிளரவைத்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Germany, Viral Video