நாடாளுமன்ற அவையில் முகக் கவசம் அணியாதது நினைவுக்கு வந்து பதறிய ஜெர்மன் அதிபர் - வைரலாகும் வீடியோ

ஏஞ்ஜெலா மார்கெல்

நாடாளுமன்ற அவைக்கு முகக்கவசம் அணியாமல் வந்ததை உணர்ந்து ஜெர்மன் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கெல் பதறிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

 • Share this:
  சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமுள்ள அனைத்து நாடுகளையும் சிதைத்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது இருந்துவருகிறது. எனவே, உலக நாடுகள் அனைத்தும் பொதுவெளிக்கும் வரும் குடிமக்கள் முகக்கவசம் அணியவேண்டும் என்று உத்தரவுபிறப்பித்துள்ளன. அதேபோல, உலக நாட்டின் தலைவர்களும் முகக் கவசத்துடனேயே பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டுவருகின்றனர்.


  கடந்த ஓராண்டில் முகக்கவசம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்துவருகிறது. இந்தநிலையில், ஜெர்மன் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல், நாடாளுமன்ற அவையில் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார். திடீரென முகக்கவசம் அணியாதது குறித்து நினைவுக்கு வந்த அவர், பதறிப் போய் முகக்கவசத்தை வாங்கி அணிகிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: