எதிர்பாராமல் நண்பனை கொன்ற குண்டு - போலீசுக்கு பயந்து தானும் தற்கொலை

போலீசார் தன்னை பிடித்துவிடுவார்கள் என பயந்த டெவின் ஹோட்ஜ், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.

Web Desk | news18
Updated: January 3, 2019, 9:42 AM IST
எதிர்பாராமல் நண்பனை கொன்ற குண்டு - போலீசுக்கு பயந்து தானும் தற்கொலை
கோப்புப்படம்
Web Desk | news18
Updated: January 3, 2019, 9:42 AM IST
துப்பாக்கியை காட்டியபோது எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்து நண்பன் உயிரிழக்க, போலீசுக்கு பயந்து போய் பள்ளி மாணவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா அருகே வசித்துவரும் டெவின் ஹோட்ஜ் (வயது 15) என்ற சிறுவனைப் பார்க்க நண்பர்கள் 3 பேர் நேற்று முன்தினம் அவனுடைய வீட்டுக்கு வந்தனர்.

அப்போது சிறுவன் டெவின் ஹோட்ஜ், தங்கள் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்து நண்பர்களிடம் காட்டினான். அப்போது டெவின் ஹோட்ஜ் தவறுதலாக துப்பாக்கியின் விசையை அழுத்திவிட்டான். இதில் அவனது அருகில் இருந்த சாத் கார்லெஸ் (17) என்கிற சிறுவனின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து.

இதையடுத்து அருகில் இருந்த மற்ற 2 நண்பர்களும், அங்கிருந்து எழுந்து ஓடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வருவதற்குள் சாத் கார்லெஸ் பரிதாபமாக இறந்துவிட்டான்.

அதே சமயம் போலீஸ் வருவதை கண்டு டெவின் ஹோட்ஜ் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடினான். எனினும் எப்படியும் போலீசார் தன்னை பிடித்துவிடுவார்கள் என பயந்த டெவின் ஹோட்ஜ், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.

Also See..

First published: January 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...