அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச். டபுள்யூ புஷ் காலமானார்

Former US President George HW Bush Dies | கடந்த பல மாதங்களாக உடல்நலக்குறைவால் புஷ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில், இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 1, 2018, 12:37 PM IST
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச். டபுள்யூ புஷ் காலமானார்
ஜார்ஜ் ஹெச். டபிள்யூ புஷ் (Photo Reuters)
Web Desk | news18
Updated: December 1, 2018, 12:37 PM IST


அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (94). இவரது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), அமெரிக்காவின் 43-வது அதிபராக இருந்தவர்.

கடந்த பல மாதங்களாக உடல்நலக்குறைவால் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில், இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவரான புஷ், சீனாவுக்கான தூதர் பொறுப்பேற்று அரசு நிர்வாகத்தில் நுழைந்தார். 8 வருடம் துணை அதிபராக இருந்த அவர் அந்நாட்டின் 41-வது அதிபராக பொறுப்பேற்றார்.

தந்தை ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் மற்றும் மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ்


அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதியாகவும் புஷ் பொறுப்பு வகித்துள்ளார். புஷ் மறைவுக்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், பனிப்போரை அமைதியாக முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கே வழிகாட்டினார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.Also See.. வசூல் நாயகன் விஜய்

First published: December 1, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...