George Floyd Murder: டெரிக் சாவினுக்கு மரண தண்டனை விதியுங்கள் - தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர் வேதனை

முன்னாள் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின்

ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டும் இனவெறி தாக்குதலுக்கு எதிராகவும் அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்தது.

  • Share this:
    அமெரிக்காவில் கருப்பின இளைஞரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் கடந்தாண்டு மே மாதம் 25-ம் தேதி போலீஸ் அதிகாரி டெரிக் சால்வின் என்பவரால் கொல்லப்பட்டார்.

    கருப்பின இளைஞரான ஜார்ஜ் பிளாய்ட் மினசோட்டா மாகாணத்தில் உள்ள ஒரு கடைக்கு பொருள்களை வாங்க சென்றுள்ளார். அவர் கொடுத்த பணத்தில் 20 டாலர் கள்ளநோட்டு இருந்ததாக அந்தக்கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 போலீஸார் அங்கு விரைந்தனர்.

    Also Read:  என்கிட்டயே சேவை வரி கேட்கிறாயா.. கத்தியுடன் பெட்ரோல் பங்கில் ரகளை செய்த அ.தி.மு.க நிர்வாகி மகன்

    ஜார்ஜ் பிளாய்டை விசாரணைக்காக போலீஸார் அழைத்துள்ளனர். அப்போது அவர்களுடன் செல்ல பிளாய்ட் மறுப்பு தெரிவித்துள்ளார். துப்பாக்கி முனையில் பிளாய்டை தரையில் கிடத்திய போலீஸ் அதிகாரி டெரிக் சால்வின் அவரது கழுத்துப்பகுதியை தனது முட்டியைக் கொண்டு கடுமையாக அழுத்தினார். இதனையடுத்து வலியால் துடித்த பிளாய்ட் தன்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என கெஞ்சினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிளாய்டின் மீது கொஞ்சம் கூட இரக்கம் காட்டாத போலீஸ் அதிகாரி டெரிக் அவரை விடவில்லை. இதன்காரணமாக மூச்சுவிடமுடியாமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ  சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டும் இனவெறி தாக்குதலுக்கு எதிராகவும் அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்தன.

    Also Read: கொரோனாவால் வருமான இழப்பு - தனியார் மோகத்தைவிடுத்து அரசு பள்ளிக்கு படையெடுக்கும் பெற்றோர்கள்

    ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் போலீஸாருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டெரிக் சாவின் உள்பட 4 போலீஸார் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கொலை வழக்கில் நான்கு பேரும் கைதாகினர். இந்த வழக்கு விசாரணையானது மினசோட்டாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக நடந்து வந்தது.

    வழக்கு விசாரணையில் டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டது. டெரிக் சாவினுக்கு 22 ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் ஜார்ஜ் பிளாய்டுக்கு எதிராக அரங்கேற்றிய கொடூரத்தை கருதி இந்த தண்டனை வழங்கியதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக ஜார்ஜ் பிளாட் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். டெரிக் -க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: