ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை

ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை
கொல்லப்பட்டவரும், கொன்ற அதிகாரியும்.
  • Share this:
அமெரிக்காவே பற்றி எரிய காரணமான ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் ஒரு கொலைதான் என உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி ஒருவர் முழங்காலை வைத்து கழுத்தில் அழுத்தியதால் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, அமெரிக்காவிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டின் உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில், கழுத்துப் பகுதி மற்றும் முதுகுப்புறம் அழுத்தப்பட்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பிளாய்ட் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் பிளாய்டுக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் இருந்ததால், காவலர்களின் கொடூரமான நடவடிக்கையால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Also see:
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading