Video | இத்தாலில் பழமையான பாலம் வெடிவைத்து தகர்ப்பு

news18
Updated: June 29, 2019, 7:42 AM IST
Video | இத்தாலில் பழமையான பாலம் வெடிவைத்து தகர்ப்பு
தகர்க்கப்பட்ட பாலம்
news18
Updated: June 29, 2019, 7:42 AM IST
இத்தாலி நாட்டில் கடந்தாண்டு 43 பேரை பலிகொண்ட பழமையான பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

இத்தாலியில் மொரண்டி பாலம்  1960ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலம், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கடந்த ஆண்டு இந்த பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து 43 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்த பாலத்தை இடித்து தள்ள முடிவு முடிவு செய்யப்பட்டு, பாலத்தின் மேற்பகுதியில் வெடிபொருட்கள் வைத்து தகர்க்கப்பட்டது.


பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்த பாலத்தை ஏராளமானர் பார்வையிட்டனர். பாலம் இடித்தபோது எழுந்த தூசு காற்றில் பரவாமல் இருக்க உடனடியாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இதே இடத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது.

(Video Courtesy: The Guardian)

Loading...

First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...