தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகும் தேர்தல்..?

ஆட்சிகள் கவிழ்க்கப்படுவதும் ராணுவம் அரியணையைப் பிடிப்பதும் போராட்டங்களும் வன்முறைகளும் தாய்லாந்து அரசியல் வரலாற்றில் தொடர் கதையாக இடம்பெற்று வருகிறது.

தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகும் தேர்தல்..?
தாய்லாந்து தேர்தல்
  • News18
  • Last Updated: January 24, 2019, 12:37 PM IST
  • Share this:
கடந்த 2014-ம் ஆண்டில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் தாய்லாந்தில் முதன்முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு மே மாதம் அன்றைய பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா தலைமையிலான அரசு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. தற்போது சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தாய்லாந்தில் பொதுத்தேர்தல் வருகிற மார்ச் 24-ம் தேதி நடைபெறும் என தாய்லாந்து தேசிய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து அரசர் மஹா வஜ்ரலோங்கோன் தேர்தல் ஆணையத்துக்கு அளித்த சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் தாய்லாந்தில் பொதுத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசியல் குழப்பங்களால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளான தாய்லாந்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு தற்போது சோர்ந்துவிட்டனர். ஒரு வழியாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அரசியல் சூழ்நிலைகள் மிகவும் சர்ச்சைக்குள்ளானதாகவே நீடித்து வருகிறது.

ஆட்சிகள் கவிழ்க்கப்படுவதும் ராணுவம் அரியணையைப் பிடிப்பதும் போராட்டங்களும் வன்முறைகளும் தாய்லாந்து அரசியல் வரலாற்றில் தொடர் கதையாக இடம்பெற்று வருகிறது.

வருகிற புதிய ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென ராணுவத்துடன் தொடர்புடைய புதிய கட்சிகளும் முன்னாள் பிரதமர் ஷினாவத்ரா தலைமையிலான கட்சியும் கடுமையாகத் தயாராகத் தொடங்கி உள்ளனர். அடுத்த தாய்லாந்து பிரதமர் யார்? என்பது குறித்த கேள்வியும் உட்கட்சிப் பூசல்களை ஏற்படுத்தி வருகிறது.மேலும் பார்க்க: தேர்தல் கூட்டணி - குழம்புவது யார்... குழப்புவது யார்?
First published: January 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்