GAZA Attack : இன்ஸ்டாகிராம் Live-ல் பதிவான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்!

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்

அந்நாட்டின் தலைநகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலிய தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

  • Share this:
இன்ஸ்டாகிராம் நேரலையில் பதிவாகியிருக்கும் காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோ இணையத்திலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கிழக்கு ஜெருசலேம் யாருக்கு சொந்தம்? என்பதில் பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. 1967ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும், பாலஸ்தீனியர்கள் இன்றளவும் ஜெருசலேம் நகரை தங்கள் தலைநகராக கருதி வருகின்றனர். அங்கிருக்கும் மசூதியில் ரமலான் நோன்பையும் இஸ்லாமியர்கள் கடைபிடிகின்றனர்.

இந்த ஆண்டும் அவர்கள் வழக்கம்போல் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மசூதிக்குள் நுழைந்த இஸ்ரேல் காவல்துறையினர், பாலஸ்தீனிய இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து, தாக்குதலையும் நடத்தியது. இந்த தாக்குதல் இருநாடுகளுக்கு இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்ததால், எப்போது வேண்டுமானாலும், இஸ்ரேல் பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

 

 



 




View this post on Instagram





 

A post shared by Maya Hussein (@mayahussein)






 

எதிர்பார்த்தை போலவே ஹமாஸ் அமைப்பின் காசா தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில்கேரளாவைச் சேர்ந்த செவிலியர் மற்றும் 9 குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். ஜெருசலேம் நகரிலும் வன்முறை வெடித்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பல காணொளிகள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது வான்வழித் தாக்குதலின் நேரலை வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

ALSO READ : இஸ்ரேலின் அதிகாலை வான்வழித் தாக்குதல்: காசாவில் 35 பேர், இஸ்ரேலில் 5 பேர் பலி- உலக நாடுகள் கவலை

லண்டனைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் மாயா ஹூசைன் (Maya Hussein), காசா நிலவரம் குறித்து இன்ஸ்டாகிராம் நேரலையில் அங்கிருப்பவர்களுடன் உரையாடினார். அந்த நேரலையில் பங்கேற்றவர்கள் தங்களின் சூழலை கூறிக்கொண்டிருக்கும்போது பயங்கரமான வெடிச்சத்தம் கேட்கிறது. பங்கேற்பாளர் உடனடியாக தாக்குதல் காட்சிகளை நேரலையாக இன்ஸ்டாகிராமில் காண்பிக்கிறார்.

 

 



 




View this post on Instagram





 

A post shared by Maya Hussein (@mayahussein)






 

வான்வழித் தாக்குதலில் பங்கேற்பாளரின் அருகாமையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் வெடித்து சுக்குநூறாகும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், தாக்குதலால் பதற்றமான அவர், தங்கள் அறையில் இருப்பவர்களை உடனடியாக எழுப்புகிறார். இந்த வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது.

தாக்குதல் குறித்து பேசிய பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலின் தாக்குதலின்போது வீடுகள் அதிர்ந்ததாகவும், தீப்பிழம்புகள் வானளவு பறந்து காசா நகரம் புகைமூட்டமாக காட்சியளித்ததாகவும் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு உடனடியாக இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தினர்.

ALSO READ :  முன்னெச்சரிக்கை இல்லாமல் இஸ்ரேல் தாக்குதல்: வீடுகளை இழந்த காசா மக்கள் குழந்தைகளுடன் அலையும் அவலம்

அந்நாட்டின் தலைநகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலிய தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அழுகுரலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published: