• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சோமாலியாவை தாக்கிய 'கதி' புயல் ஏமனை தாக்கியது..

சோமாலியாவை தாக்கிய 'கதி' புயல் ஏமனை தாக்கியது..

சோமலியாவை தாக்கிய 'கதி' புயல் ஏமனை தாக்கியது

சோமலியாவை தாக்கிய 'கதி' புயல் ஏமனை தாக்கியது

சோமாலிய துறைமுகம் அருகே படகு கவிழ்ந்ததில் ஏழு ஏமன் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கியது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
    அரபிக் கடலில் உருவான அதிதீவிரப் புயலான 'கதி', சோமாலியாவை தாக்கிய பின்னர் ஏமனின் சோகோத்ரா தீவை தாக்கியது. கதி புயல் சோமாலியாவில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஏமன் நாட்டில் மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் மழை பெய்ததால், தீவின் தலைநகர் பகுதியான ஹடிபோவை வெள்ளம் சூழ்ந்தது. பல சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், பொதுச் சொத்துகளும் சேதம் அடைந்தன.

    Also read: அச்சுறுத்தும் நிவர் புயல்.. கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தை தாக்கிய புயல்கள் என்னென்ன?

    இந்நிலையில், 'கதி' புயலானது சொகோத்ராவிலிருந்து சோமாலியாவின் மேற்கிலும், வடமேற்கில் ஏடன் வளைகுடா நோக்கியும் நகரும் என ஏமன் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதனிடையே ஏமன் அரசு சார்பு செய்தி நிறுவனமான சபா அளித்துள்ள தகவல் மூலம் சோமாலிய துறைமுகம் அருகே படகு கவிழ்ந்ததில் ஏழு ஏமன் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: