ஹோம் /நியூஸ் /உலகம் /

கேஸ் ஸ்டவ்வால் குழந்தைகளுக்கு ஆபத்தா..? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கேஸ் ஸ்டவ்வால் குழந்தைகளுக்கு ஆபத்தா..? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

கேஸ் ஸ்டவ்கள் மீத்தேன் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு வெளியேற்றுவதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • interna, IndiaAmericaAmericaAmericaAmerica

ஆதிமனிதன் நெருப்பை கண்டுபிடித்தது முதல் விறகடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு, LPG சிலிண்டர் அடுப்பு, எலக்ட்ரிக் ஸ்டவ் என நாகரிக மாற்றத்தை ஏற்று அதற்கேற்ப வாழ்வியலில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் தான் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாததாய் மாறியிருக்கும் சிலிண்டர் அடுப்புகள் குறித்த விவாதம் அமெரிக்காவில் தீவிரமாகியிருக்கிறது.

கேஸ் அடுப்பு பயன்பாடு குழந்தைகளுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடியது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது International Journal of Environmental Research and Public Health. அந்த ஆய்வறிக்கையின்படி அமெரிக்காவில் 12.7% குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ்  ஸ்டவ்தான் காரணம் என தெரிய வந்திருக்கிறது. அந்நாட்டு புற்றுநோய் ஆய்வு நிறுவனமும் இந்த தகவலை வழிமொழிந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளுக்கு பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்த நுகர்வோர் தர பாதுகாப்பு ஆணையத்தின் ஆணையர் ரிச் ட்ரம்கா மாற்று பொருட்கள் கிடைக்கும் பட்சத்தில் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை தடை செய்யலாம் என பேசியிருந்தார்.

அவரது பேட்டி தொடர்பான விவாதங்கள் இணையவாசிகளிடையே வலுத்த நிலையில் அமெரிக்க அரசு அதிகாரிகளும் ட்விட்டரில் காரசாரமான கருத்துக்களை முன்வைத்தனர். இதனையடுத்து அவரது பேச்சுக்கு விளக்கமளித்திருக்கும் ரிச் ட்ரம்கா நுகர்வோர் தர பாதுகாப்பு ஆணையம் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பொருட்களை தடை செய்யப் போவதில்லை எனவும் இனி வரவிருக்கும் பொருட்களுக்கு விதிமுறைகள் பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் முன்னதாக ஆகஸ்ட் 2022-ல் பைடன் ஆட்சியில் பணவீக்க குறைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அந்த சட்டத்தின்படி கேஸ் ஸ்டவ்க்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்டவ் பயன்படுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி நியூயார்க், கலிஃபோர்னியா போன்ற பெருநகரங்களில் ஆபத்து விளைவிக்கும் வாயுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டவற்றை கட்டடத் தொழிலில் தடை செய்யும் சட்டமும் கொண்டு வரப்பட்டது.

உண்மையிலேயே இந்த அளவு ஆபத்தானவையா கேஸ் ஸ்டவ்கள் என்று கேட்டால் ஆம் என்கின்றனர் ஆய்வாளர்கள். கேஸ் ஸ்டவ்கள் மீத்தேன் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடை வெளியேற்றுவதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 20 ஆண்டுகளில் 5 லட்சம் கார்கள் வெளியேற்றும் கரியமிலவாயுவை விட ஓராண்டில் கேஸ் ஸ்டவ்கள் வெளியேற்றும் மீத்தேன் வாயுக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை எனவும் எச்சரிக்கின்றனர்.

First published: