நைஜீரியாவில் எரிவாயு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் எரிவாயு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் எண்ணெய் குழாயில் தீ விபத்து
  • Share this:
நைஜீரியாவில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரிய தலைநகர் லாகோஸ் அருகேயுள்ள எரிவாயு தொழிற்சாலை ஒன்றின் மீது லாரி மோதியதால் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த எரிவாயு பாட்டில்கள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் தொழிற்சாலையின் அருகிலிருந்த 50 கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. விபத்து நடந்த இடத்திலிருந்து 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு  அவதிப்பட்டனர். மேலும் இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக தெரியவில்லை என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read:கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டங்கள் ரத்து...!

சட்டசபைக்கு வெளியே மருத்துவ உதவி மையம்...! அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading