தென்னாப்பிரிக்காவில் மியூசிக் ஆல்பத்திற்கான வீடியோ சூட்டின் போது எட்டு இளம் பெண் மாடல்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்நாட்டின் ஜொகனஸ்பெர்க் பகுதியில் உள்ள குருகெர்ஸ்டிராப் சிறு நகரத்தில் மியூசிக் ஆல்பம் ஒன்றுக்கான வீடியோ ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இதில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண் மாடல்களும் பல ஆண்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த ஷூட்டிங் போது துப்பாக்கிய ஏந்திய ஒரு கும்பல் உள்ளே புகுந்து அந்த ஷூட்டிங்கில் உள்ள பெண் மாடல்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
மேலும், வீடியோ ஷூட்டிங்கில் ஈடுபட்ட குழுவினரை சரமாரியாகத் தாக்கிய அந்த கும்பல் குழுவினரின் உபகரணங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த ஆண்களை நிர்வாணப்படுத்தித் தாக்கிய துப்பாக்கி ஏந்திய கும்பல், அனைவரின் பணத்தையும் பொருள்களையும் பிடுங்கி களவாடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஷூட்டிங்கிற்குள் புகுந்து சுமார் 20க்கும் மேற்பட்டோரை துப்பாக்கி முனையில் கட்டுக்குள் வைத்து அவர்களை அடித்து உதைத்து, பொருள்களை சேதப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, பொருள்களையும் திருடி சென்ற அந்த கும்பலை விரைந்து பிடிக்க தென்னாப்பிரிக்கா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் நேரடியாக களமிறங்கி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா, குற்றவாளிகளை விரைந்து பிடித்து தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டின் காவல்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காதலை வளர்த்த கொரோனா.. இயல்புநிலை வந்ததும் தடுமாறும் காதலர்கள்! என்ன காரணம்?
முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி, குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் தென்னாப்பிரிக்காவின் கனிம சுரங்கங்களில் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் பாலியல் குற்றங்கள் அதிகம் காணப்படுவதாகவும், சராசரியாக 12 நிமிடத்திற்கு ஒருவர் பாலியல் குற்றத்திற்கு ஆளாவதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Gang rape, South Africa