2020 ஆம் ஆண்டில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுடனான மோதலில் சீனாவின் இழப்புகள் அதிகம் என்றும் இருள் வேளையில் ஆற்றைக் கடக்கும்போது வேகமாக ஓடும் நீரில் பல வீரர்கள் நீரில் மூழ்கி இறந்ததாகவும் இதனை சீனா வெறும் 4 வீரர்களே அந்த மோதலில் இறந்தனர் என்றும் மூடி மறைத்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று உண்மையை உடைத்துள்ளது.
உண்மையில் நதியில் மூழ்கி 38 சீன வீரர்கள் பலியானதாக இந்த செய்தி அறிக்கை கூறுகிறது.
தி கிளாக்சன் (The Klaxon) என்ற அந்த செய்தித்தாள், பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாத ஆய்வாளர்கள் மற்றும் சீன வலைத்தள பதிவர்களின் தரவுகளை மேற்கோள் காட்டி இந்தியாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன வீரர்கள் அதிகம் பேர் பலியானதை வெளியிட்டுள்ளது.
கணிசமான சீன உயிரிழப்புகள் பற்றிய கூற்றுக்கள் புதியவை அல்ல, இருப்பினும் கிளாக்சன் சுயாதீனமாக கட்டமைத்த சமூக ஊடக ஆராய்ச்சியாளர்கள் குழு வழங்கிய சான்றுகள், சீனாவின் உயிரிழப்புகள் சீனா கூறும் கணக்கான நான்கு வீரர்களுக்கும் கூடுதலாக அதிக பலிகள் ஏற்பட்டுள்ளது என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டுகிறது என்று கிளாக்சன் எழுதியுள்ளது.
இந்தியா-சீனா இடையே கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடந்த வரலாறு காணாத கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இருளில் வேகமாக ஓடும் நதியைக் கடக்கும்போது பல வீரர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இதனை பெய்ஜிங் மறைத்து விட்டது. ஜூன் 15, 2020 அன்று கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு கிழக்கு லடாக் எல்லையில் மோதல் அதிகரித்தது.
இரு தரப்பினருக்கும் இடையே பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்த இந்த மிகக் கடுமையான இராணுவ மோதல்களில் இருபது இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தினர். முதலில் தங்கள் பக்கம் உயிரிழப்பே இல்லை என்று நாடகமாடிய சீனா பிறகு இந்திய ராணுவத்துடனான மோதலில் ஐந்து சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டதாக சீனா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது, ஆனாலும் கணக்குக் காட்டப்பட்டதை விட பலி எண்ணிக்கை அதிகம் என்றே பலதர்ப்புகளிலிருந்தும் கூறப்பட்டது.
கிழக்கு லடாக்கில் எல்லை மோதல் மே 5, 2020 அன்று வெடித்தது, பாங்காங் ஏரி பகுதியில் வன்முறை மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினரும் படிப்படியாக பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் விரைந்து தங்கள் பலத்தைக் காட்டினர்.
தொடர்ச்சியான இராணுவ மற்றும் அரசு அதிகாரிகள் தரப்பு பேச்சுவார்த்தைகளின் விளைவாக, இரு தரப்பினரும் கோக்ராவிலும், பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளிலும் கடந்த ஆண்டு படைகளை வாபஸ் பெற முடிவெடுத்து அதைச் செயல்படுத்தினர். ஒவ்வொரு தரப்பிலும் தற்போது 50,000 முதல் 60,000 துருப்புக்கள் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Galwan Valley, India vs China