சமரசமான ட்ரம்ப் - ஜின்பிங்: சீனா, அமெரிக்கா வர்த்தகப் போர் முடிகிறதா? 

போட்டிக்கு போட்டியாக இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதிப் பொருட்களுக்கு வரிகளை விதித்த நிலையில், தற்போது வர்த்தக போரில் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 2, 2018, 12:59 PM IST
சமரசமான ட்ரம்ப் - ஜின்பிங்: சீனா, அமெரிக்கா வர்த்தகப் போர் முடிகிறதா? 
ட்ரம்ப்- ஜி ஜின்பிங்
Web Desk | news18
Updated: December 2, 2018, 12:59 PM IST
அர்ஜெண்டினாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அமெரிக்க - சீன தலைவர்கள் பங்கேற்று பேசிய நிலையில், 90 நாட்களுக்கு இறக்குமதி பொருட்களுக்கு புதிய வரிகள் ஏதும் விதிப்பதில்லை என பரஸ்பரம் முடிவு செய்யப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியை, அமெரிக்கா அதிகரித்தது.

இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின் உள்ளிட்ட பொருட்களுக்கான வரியை சீனா உயர்த்தியது.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி வரியை அதிகரித்தால், அது உலக சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டர்ம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர்.

இதன்பின்னர் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திகுறிப்பில், இரு நாடுகளும் 90 நாட்களுக்கு புதிய வரி ஏதும் விதிப்பதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனப் பொருட்கள் மீது ஜனவரி ஒன்றாம் தேதி முதல் விதிக்கப்படவிருந்த 200 மில்லிடன் டாலர் வரியையும் நிறுத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் விவசாயம் உள்ளிட்ட பொருட்களை குறிப்பிட்ட விகிதத்தில் இறக்குமதி செய்வதற்கு சீனா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த என்.எக்ஸ்.பி. செமிகண்டக்டர் நிறுவனத்தை அமெரிக்காவின் குவால்காம் வாங்குவதற்கு சீனா அனுமதி அளித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இரு வல்லசரசு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த வர்த்தகப்போர் முடிவுக்கு வந்ததால், வரும் வாரத்தில் உலக சந்தைகளில் எழுச்சி காணப்படும் எனத் தெரிகிறது.
Loading...
Also see... இரவில் நிர்வாணமாக திரிந்து கொலை செய்யும் சைக்கோ கில்லர்!
First published: December 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...