ஜி 20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி - டிரம்ப் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார்

ரஷ்யா- இந்தியா- சீனா கூட்டமைப்பு, ஜப்பான்- அமெரிக்கா- இந்தியா கூட்டமைப்பு என முத்தரப்பு கூட்டங்களில் பங்கேற்பதோடு, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Web Desk | news18
Updated: June 27, 2019, 8:58 AM IST
ஜி 20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி - டிரம்ப் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார்
மோடி
Web Desk | news18
Updated: June 27, 2019, 8:58 AM IST
ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானுக்கு சென்றடைந்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்களை அவர் நாளை சந்தித்துப் பேசுகிறார்.

ஜி20 நாடுகளின் 14-வது மாநாடு, ஜப்பானின் ஒசாகா நகரில் நாளையும், நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் நேற்றிரவு புறப்பட்டுச் சென்றார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை சென்றடைந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த மாநாடு குறித்து அறிக்கை வெளியிட்ட பிரதமர், உலகம் இன்று எதிர்கொண்டு வரும் மிகப்பெரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உலக நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம், வானிலை மாற்றம் போன்ற உலகின் மிகப்பெரும் சவால்கள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி நாளை சந்தித்துப் பேசுகிறார். மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்க அதிபருடன் முதல் முறையாக பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோஜன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.இதேபோல, ரஷ்யா- இந்தியா- சீனா கூட்டமைப்பு, ஜப்பான்- அமெரிக்கா- இந்தியா கூட்டமைப்பு என முத்தரப்பு கூட்டங்களில் பங்கேற்பதோடு, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Also see... எனக்கா ஓட்டு போட்டீங்க; மோடியிடம் போய் கேளுங்க - போராடிய மக்களிடம் கோபப்பட்ட கர்நாடக மக்கள்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...