ஹோம் /நியூஸ் /உலகம் /

எதிர்காலம் இந்தியாவுக்கானது... தேசபக்தர் மோடியின் தலைமை... ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்

எதிர்காலம் இந்தியாவுக்கானது... தேசபக்தர் மோடியின் தலைமை... ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்

பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பிரதமர் மோடி சிறந்த தேசபக்தர், அவர் தலைமையில் இந்தியாவில் பல்வேறு முன்னேற்ற பணிகள் நடைபெற்றுள்ளது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பாராட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaMoscowMoscow

  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வால்டாய் டிஸ்கஸ்ஷன் கிளப் என்ற சிந்தனை அமைப்பு ஆண்டுதோறும் கருத்தரங்கு நடத்தும். இதில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்வில் இந்தியா ரஷ்யா உறவு, இந்தியாவின் எதிர்காலம், பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளிட்டவை குறித்து புதின் புகழ்ந்து பேசியுள்ளார்.

  நிகழ்வில் புதின் கூறியதாவது, " பிரிட்டனின் காலனி நாடு என்ற நிலையில் இருந்து தற்போது மாபெரும் வளர்ச்சி கண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சுமார் 150 கோடி மக்கள் இணைந்து இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி சிறந்த தேசபக்தர். அவரின் மேக் இன் இந்தியா திட்டம் பொருளாதார ரீதியாக, தர்மத்தின்படியும் (Ethics) முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் பல்வேறு முன்னேற்ற பணிகள் நடைபெற்றுள்ளது. எதிர்காலம் இந்தியாவுக்கு சொந்தமானது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை பெருமையுடன் இந்திய கூறிக்கொள்ளலாம்.

  மற்றவர்களின் அழுத்தம் தடை ஆகியவற்றுக்கு கட்டுப்படாமல், தனது நாட்டின் நலனுக்கான முடிவை சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையுடன் எடுக்கும் திறன் உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு உள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் பல தசாப்தங்களாக நெருங்கிய நட்புறவால் பிணைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடினமான சூழல் ஒரு போதும் வந்ததில்லை. வரும் காலத்திலும் இதே நிலை தொடரும் என உறுதியாக நம்புகிறேன்.

  இதையும் படிங்க: எலான் மஸ்க் வசமானது ட்விட்டர்... முதல் நாளிலேயே முன்னணி நிர்வாகிகள் வெளியேற்றம்!

  இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் சிறப்பாக மேம்பட்டுள்ளது. இந்திய விவசாயத்திற்கு தேவையான உர விநியோகத்தை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் 7.6 மடங்கு விநியோகத்தை அதிகரித்து வழங்கியுள்ளோம். உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவது அர்த்தமற்றது, தேவையற்றது. அதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதேவேளை, ரஷ்யாவின் பலம் என்ன என்பதையும் உலக நாடுகளுக்கு காட்ட விரும்பினோம்" என்று பேசினார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: India, PM Modi, Russia, Vladimir Putin