முகப்பு /செய்தி /உலகம் / நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துங்கள்.. அதிரடியாக உத்தரவிட்ட லண்டன் கோர்ட்!

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துங்கள்.. அதிரடியாக உத்தரவிட்ட லண்டன் கோர்ட்!

நீரவ் மோடி

நீரவ் மோடி

ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடிக்கு ஆளான நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • Last Updated :
  • inter, IndiaLondonLondon

இந்திய வங்கிகளில் கடன் பெற்று திருப்பித் தராமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பொருளாதார குற்றவாளிகளை நாட்டிற்கு திரும்பிக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடியவர் பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி.

இவர் தற்போது பிரிட்டன் நாட்டில் உள்ள லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். 2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து லண்டன் தப்பிச் சென்ற நீரவ் மோடியை அந்நாட்டு காவல்துறை கைது செய்து லண்டன் வாண்ட்ஸ்வர்த் சிறையில் அடைத்தது. இவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியை இன்டர்போல் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த கூடாது என லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீர்வ் மோடி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நீரவ் மோடியை இந்தியாவுக்கு கடத்தலாம் எனத் தீர்ப்பளித்து கடந்த பிப்ரவரி மாதத்தில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல்முறையீடு செய்தார்.

நீரவ் மோடிக்கு கடுமையான மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை நாடு கடத்தி இந்திய சிறையில் அடைத்தால் தீவிர பாதிப்புக்கு ஆளாவார் என நீரவ் மோடி தரப்பு நீதிமன்றத்தில் வாதிடட்து. இதற்கு பதில் அளித்த இந்திய தரப்பு வழக்கறிஞர், மும்பையில் உள்ள சிறையில் நீரவ் மோடிக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு, உரிய பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றார். இந்நிலையில், வழக்கை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம் நீரவ் மோடியை இந்தியாவுக்கு கடத்தலாம். அதற்கு எந்த தடையும் இல்லை எனத் தீர்ப்பளித்தது.

இதையும் படிங்க: இலங்கை அதிபர் ரணிலுடன் லைகா சுபாஷ்கரன் முக்கிய சந்திப்பு.. தமிழ் கைதிகள் குறித்து முக்கிய பேச்சு?

இதைத்தொடர்ந்து நீரவ் மோடியை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சியில் அரசுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்ற மேல்முறையீடு போன்ற நடவடிக்கைக்கு நீரவ் மோடி செல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

top videos
    First published:

    Tags: London, Nirav modi