• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தாலிபான்களிடமிருந்து தாலிபான்களுக்கு- அமெரிக்காவின் லட்சணம் இதுதான் - சீனா கடும் கேலி

தாலிபான்களிடமிருந்து தாலிபான்களுக்கு- அமெரிக்காவின் லட்சணம் இதுதான் - சீனா கடும் கேலி

சீனா அரசு ஊடகம் அமெரிக்காவை கேலி செய்து 3 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளது.

சீனா அரசு ஊடகம் அமெரிக்காவை கேலி செய்து 3 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கே ஆப்கானை விட்டுச் சென்றதுதான் அமெரிக்காவின் சாதனை என்று சீனாவின் அரசு ஊடகம் வீடியோ வெளியிட்டு அமெரிக்காவை கடுமையாக கேலி பேசியுள்ளது.

  • Share this:
    20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கே ஆப்கானை விட்டுச் சென்றதுதான் அமெரிக்காவின் சாதனை என்று சீனாவின் அரசு ஊடகம் வீடியோ வெளியிட்டு அமெரிக்காவை கடுமையாக கேலி பேசியுள்ளது.

    ஷினுவா செய்தி ஏஜென்சிதான் அமெரிக்காவை ஆப்கானின் நிலைமைகளுக்காகச் சாடியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பாக படையெடுத்து தாலிபான்களை விரட்டியடித்தனர், இப்போது படையை வாபஸ் பெற்று தாலிபான்களிடமே ஆப்கானிஸ்தானை ஒப்படைத்துள்ளனர், இதுதான் அமெரிக்காவின் சாதனை என்று கடும் கேலி செய்துள்ளது.

    3 நிமிட அந்த வீடியோவில், “வாழ்க்கை எங்கும் நகரவில்லை என்று நீங்கள் உணரும்போது, சிந்தித்துப் பாருங்கள். ஆப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து தாலிபான்களுக்கே மீண்டும் வந்து விட்டது.

    4 அமெரிக்க அதிபர்கள், 20 ஆண்டுகள், 2 ட்ரில்லியன் டாலர்கள், 2,300 ராணுவ வீரர்களின் சாவு ஆப்கானிஸ்தான் ஆட்சி தாலிபான்களிடமிருந்து தாலிபான்களுக்கே வந்து விட்டது

    பின்னணி இசையுடன் அமெரிக்கா மீது கடும் கேலியை சீன கம்யூனிஸ்ட் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும் அதே வீடியோவில் தாலிபான்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றும்போது அமெரிக்கா ஒதுங்கி வழி விட்டது. இதை ட்ரம்ப் காலக்கட்ட கேப்பிடல் ஹில் கலவரத்துடன் ஒப்பிட்டு பேசினார் அந்த வீடியோ தொகுப்பாளர்.

    பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அமெரிக்கா கூறியது, ஆனால் ஆப்கானில் பயங்கரவாதக் குழுக்களின் எண்ணிக்கை இந்த 20 ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கமாக அதிகரித்து 20-ஐக் கடந்துள்ளது.



    மேலும் 1 லட்சம் ஆப்கான் குடிமக்கள் கொல்லப்பட்டனர் 1 கோடிக்கும் மேல் காயமடைந்துள்ளனர். இந்தப் போரினால் 60 மில்லியன் டாலர்கள் நாளொன்றுக்கு செலவானது. வியட்நாம் போரை விட மலை விழுங்கியாக இது உள்ளது.” என்று அந்த வீடியோவில் அமெரிக்காவை வெறுப்பேற்றியுள்ளது சீனா.

    9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் ஆப்கானை ஊடுருவிய அமெரிக்கப் படைகள் அங்கு தாலிபான்களை விரட்டி அடித்தனர். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஆதரவு அஷ்ரப் கனி அரசு வீழ்ச்சியடைய தாலிபான்கள் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    18ம் புருமேரில் கார்ல் மார்க்ஸ் கூறும்போது, வரலாறு முதல் முறை துன்பியல் இரண்டாம் முறை நிகழும்போது அது கேலிக்கூத்து, ஆனால் ஆப்கான் மக்களுக்கோ எப்போதும் துயரம்தான், துன்பியல்தான். அதிகார வெறியின் கேலிகூத்தில் ஆப்கன் மக்கள் சந்திக்கும் துன்பியல் என்றே அறிவுஜீவிகள் இது பற்றி கருதுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: