மீண்டும் கொரோனா: அமெரிக்காவில் ஆக்சிஜன் பற்றாக்குறை அபாயம்

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல்.. ஆக்சிஜன் பற்றாக்குறை

கொரோனா வைரஸின் உருமாறிய வகையான டெல்டா வேரியண்ட் அமெரிக்காவில் மீண்டும் அதிவேகமாகப் பரவி வருவதையடுத்து மருத்துவமனைகளில் படுக்கை, பணியாளர்கள் பற்றாக்குறையுடன் ஆக்சிஜன் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா வைரஸின் உருமாறிய வகையான டெல்டா வேரியண்ட் அமெரிக்காவில் மீண்டும் அதிவேகமாகப் பரவி வருவதையடுத்து மருத்துவமனைகளில் படுக்கை, பணியாளர்கள் பற்றாக்குறையுடன் ஆக்சிஜன் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளது.

  அமெரிக்காவின் தென் பகுதியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரிய அளவில் எழுந்துள்ளது. கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.

  பல லட்சம் அமெரிக்கர்களைத் தொற்றிய கொரோனா தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைத் தாக்கி வருகிறது.

  புளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சில மருத்துவமனைகள் தங்களுக்கு வழங்கப்படும் ரிசர்வ் சப்ளையையும் பயன்படுத்தி வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விரைவில் தீரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மாகாண மருத்துவ அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

  பொதுவாக ஆக்சிஜன் டேங்க் 90% நிரம்பியிருக்கும். 30-40% ஆக டேங்கில் குறையும் போது மீண்டும் நிரப்பப்படும். இதனால் சிக்கல் இல்லாமல் இருக்கும் ஆனால் இப்போது ஆக்சிஜன் டேங்க் 10-20% ஆக்சிஜன் வரையில்தான் இருக்கிறது, இது ஒன்றிரண்டு நாளைக்குத்தான் வரும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் சிஎன்என் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளது. ரீஃபில் செய்தாலும் 50% தான் கிடைக்கும் நிலை உள்ளது. புளோரிடாவில் மட்டும் நாளொன்றுக்கு 700 புதிய கொரோனா தொற்றுகள்
  உருவாகின்றன.

  புளோரிடா, வடக்கு கரோலினா, மிசிசிபி, ஜார்ஜியா, தெற்கு கரோலினா, வெஸ்ட் வர்ஜீனியா போன்ற மாகாணங்களில் ஆக்சிஜன் அளவு மிகமிகக் குறைவாக உள்ளது. டிசம்பர் மாதவாக்கில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு மேலும் ஒரு லட்சம் பேர் பலியாகலாம் என்று டாக்டர் ஃபாசி தெரிவித்துள்ளார், ஆனால் தடுத்து விடலாம் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டெல்டா வேரியண்ட் கொரோனா 14 மாகாணங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை 50% அதிகரித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: