Home /News /international /

கிரிக்கெட் வீரராக வாழ்க்கையை தொடங்கி பாகிஸ்தான் பிரதமராக உயர்ந்த இம்ரான் கான்...

கிரிக்கெட் வீரராக வாழ்க்கையை தொடங்கி பாகிஸ்தான் பிரதமராக உயர்ந்த இம்ரான் கான்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

1996-ல் தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். இதற்கு நீதிக்கான அமைப்பு என்று பொருள்.

பாகிஸ்தானில் இன்று இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் இம்ரான் கானின் அரசு கவிழ்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். இந்நிலையில் எதிர்க்கட்சியினருக்கு 177 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாகூரில் 1952- நவம்பர் 25-ம் தேதி பிறந்த இம்ரான் கான், தனது உயர்படிப்பை இங்கிலாந்தில் முடித்தார். கிரிக்கெட் மீது சிறுவயது முதலே ஆர்வம் கொண்ட அவர், 18 வயதிலேயே தேசிய அளிக்காக களத்தில் இறங்கினார்.

இதையும் படிங்க - பாக். பிரதமர் இம்ரான் கானின் பதவி தப்புமா? நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

சர்வதேச போட்டிகளில் 1970 முதல் பங்கேற்ற அவர், 1981-ல் கேப்டனாக பதவி உயர்வு பெற்று, 1992-ல் பாகிஸ்தானுக்காக உலகக்கோப்பை பெற்றுத் தந்தார். ஓய்வுக்கு பின்னர், புற்றுநோயால் தனது தாய் மறைந்ததன் நினைவாக, அவரது பெயரான ஷாகத் கனும் பெயரில் புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கினார். சர்வதேச அளவில் புற்றுநோய் சிகிச்சைக்கு மிகச்சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

1996-ல் தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். இதற்கு நீதிக்கான அமைப்பு என்று பொருள். சுருக்கமாக இதனை பி.டி.ஐ. என்று அழைக்கிறார்கள்.

இதையும் படிங்க - ''இந்திய பாஸ்போர்ட்டை உலக நாடுகள் மதிக்கின்றன'' : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

2002-ல் இக்கட்சிக்கு ஒரு எம்பியும், அடுத்து 2007-ல் நடந்த தேர்தல் 80 எம்பிக்களும் கிடைத்தனர். 2013 தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்த இம்ரான் கான், 2018-ல் சிறு கட்சிகளின் உதவியோடு தனது 116 எம்பிக்கள் பலத்துடன் ஆகஸ்ட் 18-ம்தேதி பிரதமர் ஆனார்.

சொந்த வாழ்வில் ஜெமிமாவை மணந்த இம்ரான் கானுக்கு 2 மகன்கள் உள்ளன. இந்த இணை 2004-ல் விவாகரத்து பெற்றது. பின்னர் பத்திரிகையாளர் ரெஹம் கானை மணந்தார். இருவரும் 2018-ல் விவாகரத்து பெற்றனர்.

பாகிஸ்தான் பிரதமராக கடந்த 4 ஆண்டுகாலமாக இம்ரான் கான் பொறுப்பில் உள்ளார். அவரது பதவி தப்புமா என்பது இன்று தெரிந்து விடும்.
Published by:Musthak
First published:

Tags: Imran khan

அடுத்த செய்தி