சான்ட்விச் லேட்டாக எடுத்துவந்த வெயிட்டர் சுட்டுக் கொலை!

news18
Updated: August 18, 2019, 4:19 PM IST
சான்ட்விச் லேட்டாக எடுத்துவந்த வெயிட்டர் சுட்டுக் கொலை!
கோப்புப் படம்
news18
Updated: August 18, 2019, 4:19 PM IST
சான்ட்விச் தாமதமாக எடுத்து வந்த காரணத்தால் வெயிட்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஒருவர் சான்ட்விச் ஆர்டர் செய்துள்ளார். தயாரிக்க கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் கோபமடைந்த வாடிக்கையாளர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் வெயிட்டரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 28 வயதான அந்த வெயிட்டர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்துள்ளது.

ஒரு சான் ட்விச்-க்காக ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சமீகாலமாக அப்பகுதியில் அதிக அளவிலான போதைப்பழக்கம் கொண்டவர்கள் உலவி வருவதாகவும் அப்பகுதியினர் போலீசாரிடன் தெரிவித்துள்ளனர்.


இதையும் படிங்க: தீபாவளிக்கு முன்பே பிகில் ரிலீஸ் - நியூ அப்டேட்! 

வீடியோ பார்க்க: குடித்த டீக்கு பணம் கேட்ட டீக்கடைக்காரரை குத்திக்கொன்ற கும்பல்

Loading...

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...