பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த நபர்!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்

பிரான்ஸ் அதிபர் தன்னை வரவேற்க காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க அருகே சென்றார்.

  • Share this:
    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், மக்களை சந்தித்து உரையாடுவதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரான்சின் தென்கிழக்கு மாகாணத்திற்கு அதிபர் இமானுவேல் மேக்ரான் சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவ்வாறு சென்ற இடத்தில் தன்னை வரவேற்க காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க மேக்ரான் அவர்கள் அருகே சென்றார்.

    அப்போது கூட்டத்தில் முன்வரிசையில் நின்றிருந்த ஒருவருக்கு அதிபர் கை கொடுத்த நிலையில், அந்த நபர் யாரும் எதிர்பாராத விதமாக தனது கையால், அதிபரின் ஒரு கையை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் திடீரென மேக்ரான் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

    இதைத்தொடர்ந்து, அந்த நபருடன் இருந்த மற்றொரு நபர் மேக்ரானுக்கு எதிராக முழக்கமிட்டடார்.



    உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் மெக்ரானை அந்த நபரிடமிருந்து காப்பாற்றினர். தொடர்ந்து, பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னத்தில் அறைந்த அந்த நபருடன் இருந்த மற்றொரு நபரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே, மேக்ரான் கன்னத்தில் அறையும் வீடியோ உலகம் முழுவதும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: