பிரெஞ்சில் மீடூ இயக்கத்தைத் தொடங்கிய பெண்ணுக்கு 15,000 யூரோ அபராதம்!

பிரெஞ்சில் மீடூ இயக்கத்தைத் தொடங்கிய பெண்ணுக்கு 15,000 யூரோ அபராதம்!
மீடூ
  • News18
  • Last Updated: September 25, 2019, 10:05 PM IST
  • Share this:
மீடூ இயக்கத்தை பிரெஞ்சு மொழியில் தொடங்கிவைத்த சந்திரா முல்லருக்கு பாரிஸ் நீதிமன்றம் 15,000 யூரோ அபராதமாக விதித்துள்ளது.

பெண்களுக்கு பணியிடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிப்பதற்காக 2017-ம் ஆண்டு உலக அளவில் மீடு இயக்கம் தொடங்கப்பட்டது. அதன்மூலம், உலக அளவில் பல பெண்கள் தங்களுடைய பணியிடங்களில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். அதன்மூலம், பிரபலங்கள் பலரும் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள்.

2017-ம் ஆண்டு மீடூ இயக்கத்தை, ப்ரெஞ்சு மொழியில் தொடங்கிவைத்த சந்திரா முல்லெருக்கு பாரிஸ் நீதிமன்றம் தற்போது அபராதம் விதித்துள்ளது. 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ப்ரெஞ்சு மொழியில் #balancetonporc ("expose your pig") என்று ப்ரெஞ்சு மொழியில் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி குற்றம்சாட்டினார்.


முதலில், திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்டெய்ன் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார். பின்னர், சில மணி நேரங்கள் கழித்து, ப்ரெஞ்சு செய்தியாளர் பிரியான் மீதும் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்தப் பதிவில், ‘2012-ம் ஆண்டு கேன்ஸ் நிகழ்வின்போது, ‘உங்களுடைய(சந்திரா முல்லர்) மார்பகங்கள் பெரிதாக உள்ளது. நான், விரும்பும் வகையிலான பெண் நீங்கள். இரவு முழுவதும் உங்களை நான் மகிழ்வுடன் வைத்திருப்பேன்’ என்று போரின் கூறியதாக பதிவிட்டிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிரியான், ‘முறையற்று பேசியதற்காக மறுநாளே குறுஞ்செய்தியில் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். ஆனால், முல்லரின் பதிவு என்னை தவறாக சித்தரிக்கிறது. அதனால், என்னுடைய வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர், பாரிஸ் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘15,000 யூரோ அபராதமாக செலுத்தவேண்டும். அந்த ட்வீட்டை அழிக்கவேண்டும். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட வேண்டும். மேலும், இரண்டு ஊடகத்திலும் இந்த உத்தரவை வெளியிட வேண்டும்’ என்று முல்லருக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக முல்லரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Also see:

First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்