ஆர்டர் செய்துவாங்கி ஆசையாக வளர்த்த பூனைக்குட்டி புலிக்குட்டியாக மாறியது... தம்பதிகளுக்கு ஷாக்

ஆசை ஆசையாய் வாங்கிய பூனையை பார்த்து பார்த்து வளர்த்த தம்பதிக்கு பூனை புலியாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்டர் செய்துவாங்கி ஆசையாக வளர்த்த பூனைக்குட்டி புலிக்குட்டியாக மாறியது... தம்பதிகளுக்கு ஷாக்
பூனைக்குட்டி புலிக்குட்டியாக மாறிய அதிர்ச்சி
  • Share this:
பிரான்ஸ் நாட்டின் லே ஹாவ்ரே நார்மண்டியை சேர்ந்த தம்பதிகள் சவானா வகை பூனைக் குட்டியை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். சவானா வகை பூனைக் குட்டி ஆப்பிரிக்கா நாட்டில் மிகவும் பிரபலமானது. இதனை வாங்கி வளர்க்க ஆசைப்பட்ட தம்பதிகள், இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் கொடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர்.

ஆர்டர் செய்தவாறே பூனைக்குட்டியும் வந்தது. ஆசை ஆசையாய் வாங்கிய பூனையாயிற்றே... பார்த்து பார்த்து வளர்த்த தம்பதிக்கு திடீரென ஒரு சந்தேகம். இது பூனை தானா என்பது தான் அது... சாதாரணமாக பூனை குட்டி செய்யும் நடவடிக்கைகளை விட வித்தியாசமாக செய்துள்ளது ஆன்லைனில் அவர்கள் ஆர்டர் செய்த பூனை குட்டி.

ALSO READ |  Bigg Boss Tamil 4 | என்ன ரியோ..... இந்த வாரம் நீ பெர்பாமன்ஸ் பண்றியா? கோபப்பட்ட ரியோவிற்கு மீம்ஸ் போடும் நெட்டிசன்ஸ்


சரி எதற்கும் ஒரு செக் அப் செய்து விடலாம் என எண்ணி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவே விலங்கியல் நிபுணர்களை அழைத்து வந்து காவல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில் இது பூனையல்ல.. புலி என்று தெரியவர தம்பதிகளுக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது.

இதனையடுத்து  புலியை பூனையாக  மாற்றி விற்பனை செய்த விவகாரத்தில் 9 பேரை கைது செய்த காவல் துறையினர், புலிக்குட்டியை வன உயிரியல் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
First published: October 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading