பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக தீவிரமடையும் மஞ்சள் சட்டை போராட்டம்!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி ஓய்ந்திருந்த வார இறுதி போராட்டம் நேற்று மீண்டும் தொடர்ந்தது.

news18
Updated: January 6, 2019, 3:14 PM IST
பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக தீவிரமடையும் மஞ்சள் சட்டை போராட்டம்!
போராட்ட களத்தில் ஒரு காட்சி
news18
Updated: January 6, 2019, 3:14 PM IST
பிரான்சில் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மஞ்சள் சட்டைக்காரர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கம்போல இந்த போராட்டமும் வன்முறையாக மாற, போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.

பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையிலும், அதிபருக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

வார இறுதி நாட்களில் மஞ்சள் சட்டை அணிந்து மக்கள் பேரணியாகச் சென்று, அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி ஓய்ந்திருந்த வார இறுதிப் போராட்டம் நேற்று மீண்டும் தொடர்ந்தது.

தலைநகர் பாரீஸில் பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. போலீஸார் தடியடி நடத்தி, மஞ்சள் சட்டை அணியினரை கலைத்தனர்.பாரீஸ் நகரத்தின், செயின்ட் ஜெர்மைன் தெருவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள், அங்கிருந்து ஊர்வலமாகச் சென்றதுடன், கண்ணில் எதிர்பட்ட பொருட்களையெல்லாம் தீக்கிரையாக்கினர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், தாக்குதலும் நடத்தினர். போராட்டக்காரர்களும் பதில் தாக்குதல் நடத்த முயலவே அந்த இடமே போராட்டக்களமாக மாறியது.

Also see...

First published: January 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...