ஹோம் /நியூஸ் /உலகம் /

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர பதவி - இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர பதவி - இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு

ஐநா பாதுகாப்பு கவுன்சில்

ஐநா பாதுகாப்பு கவுன்சில்

இந்தியாவுக்கு நிரந்திர இடமளிக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாடுகள் ஆதரவு அளித்து வரும் நிலையில் சீனா மட்டும் முட்டுக்கட்டை போட்டுவருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaNew YorkNew York

  ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்திர உறுப்பினராக இந்தியாவுக்கு பிரான்ஸ் மீண்டும் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. உலகின் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரமிக்க அங்கமாக கருதப்படுவது அதன் பாதுகாப்பு கவுன்சில்.

  கவுன்சிலின் சர்வதேச பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு கொள்கை, அணு ஆயுத கொள்கை போன்றவற்றை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்திர உறுப்பினர்களாக உள்ளன. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுப்படுத்த வேண்டும் என்றும் அதில் இந்தியாவுக்கு நிரந்திர உறுப்பினராக இடமளிக்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு நிரந்திர இடமளிக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதற்கு சீனா மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

  இதையும் படிங்க: ட்விட்டரில் மீண்டும் வந்தார் ட்ரம்ப் - வாக்கெடுப்பு நடத்தி வழிவகுத்த எலான் மஸ்க்!

  இந்நிலையில் ஐநா சபையின் முழுமையான பொது குழு கூட்டத்தில் உரையாற்றிய, பிரான்ஸ் நாட்டின் துணை பிரிதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட, பாதுகாப்பு கவுன்சிலை விரிவுப்படுத்த வேண்டும் என்றும், அதில் இந்தியா, ஜப்பான், ஜெர்மன் நாடுகளை நிரந்திர உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் .

  தற்போதைய சூழலில் பாதுகாப்பு கவுன்சிலை விரிவுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இந்தியாவை நிரந்திர உறுப்பினராக்க தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஐநாவின் 5 நிரந்தர உறுப்பினர்களுடன் சேர்த்து தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகளும் செயல்படுகின்றன. தற்காலிக உறுப்பினராக இந்தியா உள்ள நிலையில், பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: France, India and France, United Nation