பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் உள்ளார். இவர் அந்நாட்டு இளைஞர்கள் சுகாதார நலனை கருத்தில் கொண்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரான்ஸ் நாட்டின் இளைஞர்களுக்கு விருப்பமில்லாமல் விபத்தாக கருத்தரிப்பு ஏற்படுவதை தவிர்க்க மருந்து கடைகளில் ஆணுறையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கருத்தடையில் இது ஒரு சிறிய புரட்சி என்று தனது அரசின் முடிவை புகழ்ந்துள்ள மெக்ரான். நாட்டின் 25 வயதுக்கு குறைவான பெண்களின் கருத்தரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்படுவதாகக் கூறியுள்ளார். எனவே, 18 முதல் 25 வயது கொண்ட இளைஞர்களுக்கு மருந்து கடைகளில் ஆணுறை இலவசமாக வழங்கப்படும் என்றார்.
மேலும் அந்நாட்டில் பாலியல் கல்வி மக்களிடையே ஒழுங்காக சென்று சேரவில்லை என்ற அதிபர் மேக்ரான், புத்தகத்தில் இருப்பது போல் இல்லாமல் எதார்த்தத்தில் நிலைமை வேறாக உள்ளது. இதில் நமது ஆசிரியருக்கு மேலும் முறையாக பயிற்சி வழங்க வேண்டும் என்றார்.
பிரான்ஸ் நாட்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே 18 அதற்கும் குறைவான பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
இதையும் படிங்க: மாண்டஸ் மாண்டால் அடுத்து வரும் புயலின் பெயர் ‘மொக்கா’.! ஏன் இந்த பெயர்?
பாலியல் நோய்கள் அதிகரித்து காணப்பட்டதால், 2018ஆம் ஆண்டில் பிரான்ஸ் அரசு மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் கொடுத்தால் ஆணுறை சலுகை விலையில் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது. தற்போது தனது இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக 18 முதல் 25 வயதினர் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே ஆணுறை பெற்றுக்கொள்ளலாம் என்று புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Condom, Emmanuel Macron, France, Sexual Health, Sexual Wellness