இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை எதிரிகள் எனவும், ஜிகாதிகளை புகழ்ந்தும் மதகுரு பிரசங்கம் செய்து வந்தது கண்டறியப்பட்ட நிலையில் மசூதியை மூட பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான ஃபிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள Beauvais நகரில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் மதகுருவான இமாம், ஜிகாதிகளுக்கு ஆதரவாக பிரசங்கம் செய்து வருவதாக பிரான்ஸ் அரசுக்கு தகவல் சென்றது. இது குறித்து விசாரணை நடத்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மானி உத்தரவிட்ட நிலையில், அந்த குற்றச்சாட்டு நிரூபனம் ஆகியிருக்கிறது. இதையடுத்து 6 மாதங்களுக்கு அந்த குறிப்பிட்ட மசூதியை மூட பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் இருந்து 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள Oise மாகாண தலைநகரான Beauvais நகரில் சுமார் 50,000 பேர் வசித்து வருகின்றனர். இந்நகரில் அமைந்துள்ள மசூதியின் மதகுரு ஒருவர் ஜிகாதிகளை போற்றும் வகையில் பிரசங்கம் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
Also read:
தாயிடம் தகராறு செய்த உறவினரை படுகொலை செய்த 10, 11ம் வகுப்பு சிறுமிகள்
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பின்படி, குறிப்பிட்ட மசூதியின் மதகுரு, தனது பிரசங்கங்களில் வன்முறையை முன்னின்று நடத்தும் ஜிகாதிகளை ஹீரோக்களாக வர்ணித்துள்ளார். இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை எதிரிகள் என குறிப்பிட்டு வந்திருக்கிறார். மேலும் கிறிஸ்தவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் யூதர்களை குறிவைத்து ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இமாம் பேசியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
எனவே அடுத்த இரண்டு நாட்களுக்குள் இந்த மசூதியை மூட உத்தரவிட்டுள்ள பிரான்ஸ் அரசு, பயங்கரவாத செயல்களை தடுக்கும் நோக்கில் அடுத்த 6 மாதங்களுக்கு அந்த மசூதியை மூட உத்தரவிட்டுள்ளது.
Also read:
இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!
உள்ளூர் செய்தித்தாளான Courrier Picard வெளியிட்டுள்ள செய்தியில், அந்த இமாம் சமீபத்தில் தான் மதம் மாறியவர் என கூறியுள்ளது. மேலும் அவர் எப்போதாவது தான் அங்கு பிரசங்கம் செய்வார் என கூறுகிறார்கள், உண்மையில் அவர் அங்கு தினசரி அடிப்படையில் பிரசங்கம் செய்து வருகிறார் என தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் அந்த மசூதியின் நிர்வாகத்தின் சார்பிலான வழக்கறிஞர் சமீம் பொலாகி கூறுகையில், மசூதியை மூடும் பிரான்ஸ் அரசின் உத்தரவை நிறுத்தி வைக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட இமாம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, அந்நாட்டில் மொத்தம் உள்ள 2600 மசூதிகள், பிரார்த்தனை தலங்களில் சமீபத்தில் மட்டும் 100 மசூதிகளில் பிரிவிணைவாத கருத்தியலை பரப்பப்படுகிறதா என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.