Home /News /international /

corona virus| பிரான்சில் கொரோனா டெல்டா வைரஸ் பயங்கரம்- தினசரி பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டியது

corona virus| பிரான்சில் கொரோனா டெல்டா வைரஸ் பயங்கரம்- தினசரி பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டியது

வெண்ட்டிலேட்டரில் கொரோனா நோயாளி

வெண்ட்டிலேட்டரில் கொரோனா நோயாளி

பிரான்சில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் தீவிரமாகி வருகிறது.

    பிரான்சில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் தீவிரமாகி வருகிறது.

    பிரான்சில் வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 611 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 90 லட்சத்து 88 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.

    இதனிடையே அங்கு ஒமைக்ரான் வைரசும் விரைவாக பரவி வருவதால், நிலைமை இன்னும் மோசமாகலாம் என சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அதிபர் மேக்ரான் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    பிரான்சில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்தில் இரட்டிப்பாகி உள்ளது. டெல்டா வைரஸ் அதிகமாகப் பரவுவதால் மருத்துவமனைகளில் ஐசியு-க்களில் நெருக்கடி அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் டெல்டா வைரஸுக்கு 1000 பேருக்கு மேல் மரணமடைந்ததில் பலியானோர் எண்ணிக்கை மொத்தமாக 1,22,000 ஆக அதிகரித்துள்ளது.

    அதிபர் இம்மனுவேல் மேக்ரான் அரசு எமர்ஜென்சி கூட்டம் நடத்தி விவாதித்து வருகிறது. மீண்டும் கடுமையான ஊரடங்குக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அங்கு எந்த ஒரு பொதுஇடத்திலும் கூடுவதற்கு வாக்சின் எடுத்துக் கொண்ட சான்றிதழ் அவசியம் என்ற சட்டம் அமல் படுத்தப்படவுள்ளது. வாக்சின் போடாதவர்கள் கொரோனா நெகெட்டிவ் சர்டிபிகேட் அல்லது அதிலிருந்து மீண்டதற்கான மருத்துவ சான்றிதழைக் காட்டுவதும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

    பெல்ஜியத்தில் சினிமா அரங்குகள் மால்கள் மூடப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் நெதர்லாந்தில் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. அதே போல் அத்தியாவசியமில்லாத கடைகள், ஷாப்பிங் மால்களும் மூடப்பட்டு விட்டன.

    Also Read: ஒமைக்ரான் அச்சுறுத்தல்: குழந்தைகளிடையே பாதிப்பு 4 மடங்காக உயர்வு - அலறும் அமெரிக்கா

    Also Read: 120 மணி நேர ரெய்டு.. ரூ.257 கோடி ரொக்கம் பறிமுதல்.. தொழிலதிபர் வீட்டில் பணப் புதையல்..
     பிரிட்டனில் நேற்று வெள்ளிக்கிழமை 1,22,186 கேஸ்கள் ஒரே நாளில் ரிப்போர்ட் ஆகியுள்ளன. இந்நிலையில் பிரான்சிலும் டெல்டா, ஓமிக்ரான் பரவி வருவதால் கடும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona, France

    அடுத்த செய்தி