இந்தியாவுடனான கூட்டணி புதிய உச்சத்தை தொட்டுள்ளது - பிரான்ஸ் தூதர் மகிழ்ச்சி

ரபேல் போர் விமானங்கள் இந்தியா வரும் நிலையில், இந்தியா - பிரான்ஸ் கூட்டணி புதிய உச்சத்துக்கு செல்வதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான கூட்டணி புதிய உச்சத்தை தொட்டுள்ளது - பிரான்ஸ் தூதர் மகிழ்ச்சி
ரபேல் விமானம்
  • Share this:
கார்கில் போரில் இந்தியா வெற்றி அடைந்ததன் 21ஆம் ஆண்டு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. கார்கில் போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு அளித்த நிலையில், பிரான்சும் போர் விமானங்களை வழங்கி ஆதரவு தெரிவித்தது.

பிரான்சில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மிராஜ் 2000 ரக போர் விமானம், கார்கில் போரில் முக்கிய பங்காற்றியது. இஸ்ரேலின் லேசர் குண்டுகளை, மிராஜ் 2000 ரக போர் விமானத்தில் பொருத்தி இந்தியா நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவம் நிலைகுலைந்தது.

இந்நிலையில் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லினன், தனது டிவிட்டர் பக்கத்தில் இருநாட்டு உறவு குறித்து பதிவிட்டுள்ளார்.


Also read... பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன 5 ரபேல் போர் விமானங்கள்

அதில் கார்கில் வெற்றி தினத்தில் இந்திய படையினருக்கு பிரான்ஸ் மரியாதை செலுத்துவதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவுடன் பிரான்ஸ் எப்போதும் இணைந்து செயல்படும் என்றும், மிராஜ் முதல் ரபேல் வரை இருநாட்டு கூட்டணி புதிய உச்சத்தை தொட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading