• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • "எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்”- ட்ரம்ப்புக்கு பிரான்ஸ் பதிலடி

"எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்”- ட்ரம்ப்புக்கு பிரான்ஸ் பதிலடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

”பிரான்ஸ் நாட்டில் நடக்கும் விவகாரங்களில் நீங்கள் தலையிட வேண்டாம்” என பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
”பிரான்ஸ் நாட்டில் நடக்கும் விவகாரங்களில் நீங்கள் தலையிட வேண்டாம்” என பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த சில நாள்களாக ‘Yellow Vest" போராட்டம் மிகவும் தீவிரமாகி வருகிறது. பிரான்ஸில் எரிபொருள் மீதான் வரி உயர்வைக் கண்டித்துத் தொடங்கப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்து அரசுக்குப் பெரும் நெருக்கடியை உண்டாக்கியது. மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பல அறிவிப்புகளை வெளியிட்டது. வரியெல்லாம் உயர்த்தப்போவதில்லை என அறிவித்த பின்னரும் தொடர்ந்து நடுத்தர மக்கள் மீது திணிக்கப்படும் வரிகளைக் கண்டித்துப் போராட்டங்கள் தொடர்கின்றன.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரீஸின் மோசமான நாட்கள். முற்றிலும் தேவையே இல்லாததும் அதிகப்படியான பொருள் செலவிலும் உருவான பாரீஸ் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். இந்தப் பணத்தை குறைந்த வரி விதிப்புக்காக மக்களிடமே அளித்துப் பயனடையலாம். இந்த மாதிரியான ஒப்பந்தத்தை எல்லாம் தாண்டிப் பயணிக்கிறது அமெரிக்கா. கடந்த ஆண்டு பெரும் நாடுகளுள் மாசு வெளிப்பாட்டைக் குறைத்துக் கொண்ட ஒரே நாடு அமெரிக்காதான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டுக்குப் பதிலளித்த பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்- வெஸ் லீ டிரியன், “எங்கள் நாட்டை விட்டுவிடுங்கள். உங்கள் நாட்டு உள் விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. அதையே நீங்களும் பின்பற்றுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னரும் ட்ரம்ப், “பாரீஸ் ஒப்பந்தம் எல்லாம் பாரீஸுக்கு ஒத்துவராது. பிரான்ஸ் முழுவதும் போராட்டங்களும் கலவரங்களுமாக உள்ளன. சுற்றுச்சூழலைக் காக்க மூன்றாம் நாடுகளுக்கு அதிகப்படியான பணத்தை செலவழிப்பதில் மக்களுக்கு விருப்பமில்லை. ‘எங்களுக்கு ட்ரம்ப் வேண்டும்’ என்கிறார்கள். பேரன்பு பிரான்ஸ்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாரீஸ் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸுக்கும் அமெரிக்காவுக்கும் நீடிக்கும் மோதல் போக்கை இந்த ட்விட்டர் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

மேலும் பார்க்க: தளபதி 26 | விஜய்யின் திரை பயணத்தை மாற்றியமைத்த 26 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: