பிரான்ஸில் அவசர நிலை பிரகடனம்?- வீரியம் அடையும் கலவரம்

பிரான்ஸ் நாட்டில் போராட்டம் கலவரமாக மாறியுள்ளதால் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: December 2, 2018, 6:17 PM IST
பிரான்ஸில் அவசர நிலை பிரகடனம்?- வீரியம் அடையும் கலவரம்
பிரான்ஸ் கலவரம் (Image reuters)
Web Desk | news18
Updated: December 2, 2018, 6:17 PM IST
பிரான்ஸ் நாட்டில் கலவரம் வீரியம் அடைந்து வருவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

போராட்டங்களின் போது முகமூடி அணிந்து இளைஞர்கள் பலர் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாட்டின் அமைதி நிலை சீர்குழைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் அரசு சார்பில் போராட்டங்களில் ஈடுபடுவர்கள் வன்முறையை விடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை பிரான்ஸ் நாட்டின் செய்தித் தொடர்பாளர் பெஞ்சமின் க்ரீவெக்ஸ் வெளியிட்டுள்ளார். ஆனால், போராட்டங்கள் யார் தலைமையில் நடக்கிறது என்பது தெரியாததால் யாரை அழைத்துப் பேசுவது என அரசு குழப்ப நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது அரசு அதிகாரிகளுடன் போராட்டத்தை நிறுத்துவது குறித்தும் போராட்டக்காரர்களுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்தும் அதிபர் மேக்ரான் ஆலோசித்து வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவசர நிலை பிரகடனம் குறித்தும் ஆலோசித்து பிரான்ஸ் அரசு முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: நாட்டின் 23வது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேற்றார்.
First published: December 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...