பிரான்ஸ் நாட்டில் மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 51 பேருக்கு மங்கிபாக்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து உலகளவில் மங்கிபாக்ஸ் பாதிப்பு எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இதுவரை 22 முதல் 63 வயது கொண்ட ஆண்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. யாரும் உயிருக்கு ஆபத்தான சூழலில் இல்லை என அந்நாடு தெரிவித்துள்ளது. பொதுவாக ஆப்ரிக்கா கண்டத்தில் மட்டுமே காணப்படும் இந்த அரிய வகை வைரஸ், தற்போது ஆப்பிரிக்கா கண்டத்தில் இல்லாத 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 21 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல கனடாவில் இந்த நோய் பாதிப்பு எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. இந்நோய் பரலானது மருத்துவ கழிவுகள் மூலம் கூட விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என எச்சரித்துள்ளனர். ஆங்காங்கே இது போன்ற ஏற்படும் பாதிப்புகளை கூர்ந்து கவனித்து தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக தொலைநோக்கு திட்டம் தேவை. தற்போதைய பாதிப்பை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டால், இந்த நோயின் மாற்று வடிவத்தை அடுத்த 2 ஆண்டுகளில் நாம் சந்திக்க நேரலாம் என உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நலப் பிரிவு தலைவர் வில்லியம் காரேஷ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.38.80 லட்சம் பரிசுத்தொகை - அமெரிக்க உச்சரிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அமெரிக்க மாணவி
1958ம் ஆண்டு கோபன்ஹேகனில் உள்ள ஸ்டேட் சீரம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970ம் ஆண்டு காங்கோவில் பரவத்தொடங்கியுள்ளது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மங்கி பாக்ஸ் வைரஸ் Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.