கப்பல் மூழ்கியதால் கடலில் கொட்டிய எண்ணெய்: சுத்தம் செய்யும் பணியில் ஃப்ரெஞ்ச் அரசு!

சுமார் 2 ஆயிரம் டன் எண்ணெய் கடல் பகுதியில் கொட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tamilarasu J | news18
Updated: March 18, 2019, 11:49 AM IST
கப்பல் மூழ்கியதால் கடலில் கொட்டிய எண்ணெய்: சுத்தம் செய்யும் பணியில் ஃப்ரெஞ்ச் அரசு!
அட்லாண்ட்டிக் கடலில் கப்பல் விபத்து
Tamilarasu J | news18
Updated: March 18, 2019, 11:49 AM IST
அட்லாண்டிக் கடலில் கொட்டிய எண்ணெயை அகற்றும் பணியில் அதிநவீன கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இத்தாலியைச் சேர்ந்த கிராண்டி அமெரிக்கா என்ற கண்டெய்னர் கப்பல் ஃப்ரான்ஸுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் தீப்பற்றி மூழ்கி விபத்துக்குள்ளானது.

அதில் இருந்த சுமார் 2 ஆயிரம் டன் எண்ணெய் கடல் பகுதியில் கொட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனால் கடல் பகுதி முழுவதும் எண்ணெய் பரவத் தொடங்கியுள்ளது. சுமார் 10 கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெய் பரவியுள்ளதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய கடற்பாதுகாப்பு அமைப்பினர் செயற்கைக் கோள் மூலம் எண்ணெய் பரவியுள்ள இடத்தைக் கண்டறிந்து நவீன எந்திரங்கள் மூலம் எண்ணெய் படலத்தை அகற்றி வருகின்றனர்.

முன்னதாக 2011-ம் அண்டு டிசம்பர் மாதம் இதே கடல் பகுதியில் டிகே பிரெம்மென் என்ற சரக்குக் கப்பல் கவிழ்ந்து 70 டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.

இதே போன்று இந்தியாவிலும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளனது. இதனால் அவற்றில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது குறிப்பிடத்தக்கது.
Loading...
மேலும் பார்க்க:
First published: March 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...