தீ விபத்தில் 3-வது மாடியில் சிக்கிய குழந்தைகள்... ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர்

ஃபிரான்ஸில் தீ விபத்தில் சிக்கி மூன்றாவது மாடியில் இருந்து குதித்த இரு குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளனர்.

தீ விபத்தில் 3-வது மாடியில் சிக்கிய குழந்தைகள்... ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர்
abc video screen shot
  • Share this:
ஃபிரான்ஸின் கிரெனோபிள் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் திடீரென தீப்பிடித்தது. அந்தக் குடியிருப்பில் 3 மற்றும் 10 வயதுடைய இரு குழந்தைகள் சிக்கிக் கொண்டனர்.

வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் உள்ளே சிக்கிக் கொண்ட இருவரும் ஜன்னல் வழியாக உதவி கோரினர். அப்போது கீழே கூடியிருந்தவர்கள் குழந்தைகளை குதித்து விடுமாறு வலியுறுத்தினர்.

இதையடுத்து மூன்று வயதுள்ள குழந்தையை கீழே தூக்கிப் போட்ட குழந்தை தானும் எகிறி குதித்தது. இருவரையும் லாவகமாகப் பிடித்த பொதுமக்கள் காயமின்றி காப்பாற்றினர்.


Also read... செவ்வாய்க்கு பயணத்தை தொடங்கிய சீன விண்கலம்

ஆனால் குழந்தைகளை காப்பாற்றிய ஒருவருக்கு மட்டும் கைமுறிவு ஏற்பட்டது. மேலும், குழந்தைகள் வீட்டில் தனியாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது ஏன்? எவ்வாறு தீப்பிடித்தது? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading