ஹோம் /நியூஸ் /உலகம் /

விண்வெளியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, 4 பேரும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்!

விண்வெளியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, 4 பேரும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்!

விண்வெளியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, 4 பேரும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்!

விண்வெளியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, 4 பேரும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்!

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் விண்வெளியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, நான்கு பேரும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  புவி சுற்றுவட்டப்பாதைக்கு சுற்றுலா பயணிகளை மட்டும் சுமந்து சென்றதோடு, வெற்றிகரமாக பயணத்தையும் நிறைவு செய்த முதல் விண்கலம் இதுதான். உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், கடந்த வியாழன் அன்று 4 பேரை கட்டண அடிப்படையில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக விண்வெளிக்கு அனுப்பியது.

  இன்ஸ்பிரே‌ஷன் 4 என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளி பயணத்தில், அமெரிக்காவின் பெரும் பணக்காரரும், ஷிப்ட் 4 பேமண்ட்ஸ் நிறுவனத் தலைவருமான, ஜாரிட் ஐசக்மென் தலைமையிலான 4 பேர் பயணம் செய்தனர்.

  புளோரிடாவில் உள்ள கேப் கேனவரெல் ஏவுதளத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட டிராகன் விண்கலம், புறப்பட்ட 12 நிமிடங்களில் புவியின் சுற்று வட்டப்பாதையில் பிரிந்து சென்றது. மூன்று மணி நேரத்தில் 590 கிலோ மீட்டர் உயரத்தை விண்கலம் அடைந்தது. இது சர்வதேச விண்வெளி நிலையம் அமைந்திருக்கும் இடத்தை விட 160 கிலோ மீட்டர் அதிக உயரமாகும்.

  திட்டமிட்டபடி இலக்கை அடைந்த டிராகன் விண்கலம் பூமியை படம் பிடித்து அனுப்பியது. விண்கலத்தில் சென்ற 4 பேரும் இசைக்கருவி வாசித்தும், ஓவியம் வரைந்தும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டனர். விண்வெளியில் இருந்தவாறு, பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுடன் இந்த குழுவினர் ரேடியோ மூலம் உரையாடினர்.

  3 நாள் பயணத்தை நிறைவு செய்த அந்த விண்கலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 4.30 மணியளவில் புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரத்தில் பாராசூட்களின் உதவியுடன் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண்வெளி சுற்றுலா பயணம், விண்வெளி வரலாற்றில் இது புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

  ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளி சுற்றுலா பயணத்தை நிறைவு செய்தவர்களை, அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

  விண்வெளி சுற்றுலா பயணம் மேற்கொள்ள பலரும் தங்களை ஆர்வமுடன் அணுகுவதாகவும், ஆனால் ஆண்டிற்கு 5 முதல் 6 பயணங்களை மட்டுமே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தேவை ஏற்பட்டால் அவற்றை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Space, Spacecraft, Tour