ஹோம் /நியூஸ் /உலகம் /

ஓவர் ஸ்பீடு.. மரத்தில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்.. 4 மாணவர்கள் உயிரிழப்பு!

ஓவர் ஸ்பீடு.. மரத்தில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்.. 4 மாணவர்கள் உயிரிழப்பு!

கிரிமியா கார் விபத்து

கிரிமியா கார் விபத்து

சிம்ஃபெரோபோல் பகுதிக்கு அருகில் வரும்போது வண்டி கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கிரிமியாவின்  வியாழக்கிழமை நடந்த ஒரு கார் விபத்தில் நான்கு இந்திய மருத்துவ மாணவர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய அரசுக்கு சொந்தமான உள்நாட்டு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டி தெரிவித்துள்ளது.

ரெனால்ட் லோகன் கார் செர்ஜிவ்-சென்ஸ்கி தெருவில் இருந்து கிரிமியாவில் உள்ள செயின்ட் சிம்ஃபெரோபோல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கார் அதிவேகமாக சென்றதால் சிம்ஃபெரோபோல் பகுதிக்கு அருகில் வரும்போது வண்டி கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் டிரைவர் வண்டியை நிறுத்த முடியாமல் தடம் மாறி அருகில் உள்ள ஒரு மரத்தின் மேல் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

ரஷ்ய செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டியின் படி, விபத்தில் நான்கு இந்திய இரண்டு மாணவர்கள் மருத்துவ மாணவர்கள் பலியாகினர். அவர்களில் இருவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தனர். மேலும் இருவர் நான்காம் ஆண்டு மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

கிரிமியா குடியரசின் உள்துறை அமைச்சகத்தின் படி, இந்த கொடூரமான விபத்து குறித்து போலீசார் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Car accident, Students