8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்து கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்

8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்து கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்
ஜார்ஜ் ஹூட்
  • Share this:
அமெரிக்கவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஜார்ஜ் ஹூட் 8 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் ’பிளாங்’ என்ற உடற்பயிற்சி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

62 வயதான  ஜார்ஜ் ஹூட் அமெரிக்க கடற்படை முன்னாள் வீரராவார். இவர் 2011-ல் நீண்ட நேர பிளாங் சாதனையை செய்திருந்தார். பின்னர் அது முறியடிக்கப்படவே மீண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

இந்த முறை 8 மணிநேரம் 15 நிமிடம், 15 வினாடிகள் இடைவிடாமல் ‘பிளாங் செய்து’ சாதனை படைத்துள்ளார் இவர். 'பிளாங்' என்பது குப்புற படுத்தபடி இரு கைகள், கால்களை ஊன்றி உடலின் பாகம் எதும் தரையில் படாமல் கை, கால்களின் உதவியோடு அடிவயிற்றுக்கு கொடுக்கக் கூடிய பயிற்சியாகும்.


பொதுவாக உடற்பயிற்சியைத் தொடங்குபவர்கள் ஆரம்பகாலத்தில் தினமும் 60 விநாடிகள் வீதம் 3 முறை பிளாங் பயிற்சி செய்யவே பரிந்துரைக்கப்படுவார்கள். இது தொப்பை மற்றும் இடுப்பு தசைகளை குறைக்கவும், கழுத்து மற்றும் தோள்களை வலுப்படுத்தவும் உதவும் என்பதால் இதனை உடற்பயிற்சி வல்லுனர்கள் பரிந்துரைப்பது வழக்கம்.

இந்த சாதனைக்காக ஜார்ஜ் ஹூட் கடந்த 18 மாதங்களாக தினமும் 7 மணிநேரத்திற்கும் மேலாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். சாதனை புரிந்ததும் அதை கொண்டாடும் விதமாக 76 புஷ்-அப்களை எடுத்த ஹூட் ஒரு மணிநேரத்தில் 2,806 புஷ்-அப்களை எடுப்பது புதிய கின்னஸ் சாதனை புரிவதே தனது அடுத்த இலக்கு என தெரிவித்தார்.
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்