பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது!

சர்தாரியும், சகோதரி தல்பூரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

Web Desk | news18
Updated: June 10, 2019, 11:38 PM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது!
ஆசிப் அலி சர்தாரி
Web Desk | news18
Updated: June 10, 2019, 11:38 PM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், மறைந்த பெனாசீர் புட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி 440 கோடி ரூபாய் அளவிலான போலி பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் அதிபராக 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பதவி வகித்த சர்தாரி. மனைவியும் முன்னாள் பிரதமருமான  பெனாசீர் புட்டோ மறைந்தபிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

சர்தாரி மற்றும் சகோதரி மற்றும் தர்பூரின் தனியார் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு போலி கணக்குகள் மூலமாக 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக தேசிய பொறுப்புடைமை பிரிவு வழக்குத் தொடர்ந்தது.

இந்நிலையில், சர்தாரியும், சகோதரி தல்பூரும் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அதைத் தொடர்ந்து சர்தாரியின் வீட்டுக்கு ஏராளமான போலீசார் சென்று அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் நாளை ஆஜர் செய்யப்படுகிறார். உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய சர்தாரிக்கு வாய்ப்பு உள்ளது.

Also Watch

First published: June 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...