காஷ்மீரில் பாதிக்கப்பட்டவர் என பார்ன் நடிகர் படத்தைப் பகிர்ந்த பாகிஸ்தான் முன்னாள் அதிகாரி!

news18
Updated: September 3, 2019, 3:21 PM IST
காஷ்மீரில் பாதிக்கப்பட்டவர் என பார்ன் நடிகர் படத்தைப் பகிர்ந்த பாகிஸ்தான் முன்னாள் அதிகாரி!
அப்துல் பாசித்
news18
Updated: September 3, 2019, 3:21 PM IST
இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதராக இருந்த அப்துல் பாசித், காஷ்மீரில் பாதிக்கப்பட்டவர் என்று பார்ன் திரைப்படங்களில் நடித்தவருடைய படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவரை நெட்டீசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்தவர் அப்துல் பாசித். அவர், இன்று ட்விட்டரில் அமர் என்பவர் பதிவிட்டிருந்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த புகைப்படத்துக்கு மேலே, இவர், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த யூசுப். பெல்லட் தாக்குதலால் கண்பார்வையை இழந்துவிட்டார். அவருக்காக குரல் எழுப்புங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.Loading...இந்தப் படத்தை அப்துல் பாசித் ரீட்விட் செய்திருந்தார். ஆனால், படத்தில் இருந்தவர் பார்ன் திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஜானி சின்ஸ்(Johnny Sins). அவர், ரீட்விட் செய்திருந்ததை, பாகிஸ்தான் செய்தியாளர் நைய்லா இனாயத் ஸ்கிரின்ஸாட் எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதனையடுத்து, நெட்டீசன்கள் அனைவரும் அப்துல் பாசித்தை வறுத்தெடுத்துவிட்டனர்.

Also see:

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...