அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு...

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு...
அதிபர் டிரம்ப்
  • News18
  • Last Updated: September 18, 2020, 11:20 AM IST
  • Share this:
அமெரிக்காவின் மாடல் அழகி எமி டோரிஸ், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த எமி, 1997-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியின் போது, டொனால்ட் டிரம்ப் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தனது விருப்பத்திற்கு மாறாக, தவறாக இறுக அணைத்து, உடல் பாகங்களை தொட்டும் முத்துமிட்டதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், அந்த டென்னிஸ் போட்டியின்போது ட்ரம்ப அங்கு இருந்ததற்கான அத்தாட்சியாக புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்

ஏமி டோரிஸ் வெளியிட்ட புகைப்படங்கள்டிரம்பின் பிடியில் இருந்து தான் வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாகவும் கூறியிருக்கிறார். அதேநேரம், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார் டிரம்ப். தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதற்காக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் இவரை ஏவிவிட்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.Also read... Gold Rate | தொடர் சரிவுக்கு இடையே இன்று அதிகரித்தது தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

அமெரிக்காவில் வரும் நம்பவர் முதல் வாரத்தில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading