ஹோம் /நியூஸ் /உலகம் /

இரண்டாவது குண்டு நெஞ்சில் பாய்ந்தது.. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட காட்சி (பதற வைக்கும் வீடியோ)

இரண்டாவது குண்டு நெஞ்சில் பாய்ந்தது.. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட காட்சி (பதற வைக்கும் வீடியோ)

இரண்டாவது குண்டு நெஞ்சில் பாய்ந்தது.. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட காட்சி (பதற வைக்கும் வீடியோ)

இரண்டாவது குண்டு நெஞ்சில் பாய்ந்தது.. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட காட்சி (பதற வைக்கும் வீடியோ)

முதல் குண்டு பாய்ந்த உடனே, பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரிக்க தாமதமான நிலையில் இரண்டாவது குண்டு அபே மீது பாய்ந்தது தெளிவாக தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் இன்று டோக்கியோ கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கு செவ்வாயன்று நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் நீண்டகால பிரதமராக இருந்த ஷின்சோ அபே, கடந்த 2020-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா். இருப்பினும், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிப் பணிகளில் வழக்கம்போல் ஈடுபட்டாா். நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தோ்தலையொட்டி மேற்கு ஜப்பானில் உள்ள நாரா என்ற நகரில் ஒரு ரயில் நிலைய வாயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறந்தவெளி பிரச்சார கூட்டத்தில் ஷின்சோ அபே பங்கேற்றாா்.

கூட்டத்தில் அவா் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுடும் சப்தம் இரு முறை கேட்டது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் மாா்பை பிடித்தபடி ஷின்சோ அபே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தாா். அவரை பின்புறத்திலிருந்து ஒரு நபா் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. உடனே, ஷின்சோ அபே ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இல்லை.

இதுதொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், ‘அபேவுக்கு கழுத்தில் இரு காயங்களுடன் ஒரு தமனியும் சேதமடைந்து, இதயத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டது. அதனால் அவா் உயிரிழந்தாா்’ என்றாா்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது சுட்டு படுகொலை செய்யப்பட்டது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஷின்சோ அபேயை துப்பாக்கியால் சுட்ட நபர், ஜப்பான் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர் என்பது தெரியவந்தது.

துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்சோ அபே (67) உடல் இன்று டோக்கியோ கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாயன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான பல்வேறு வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில் ஒரு வீடியோவில், துப்பாக்கிச்சூடு நடந்தபோது, அவர் மீது முதல் குண்டு பாயவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அந்த நபர் சுட்ட முதல் குண்டு அபே மீது பாயாத நிலையில், பலத்த சத்தத்தைக் கேட்டு அவர் திரும்பியபோது, இரண்டாவது குண்டு அவரது கழுத்து பக்கம் பாய்ந்தது. முதல் குண்டு பாய்ந்த உடனே, பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரிக்க தாமதமான நிலையில் இரண்டாவது குண்டு அபே மீது பாய்ந்தது தெளிவாக தெரியவந்துள்ளது.

First published:

Tags: Japan, Shinzo Abe