ஃபிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஃபிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை
ஃபிரான்ஸின் முன்னாள் பிரதமர் ஃபிரான்கோய்ஸ் ஃபில்லன்
  • Share this:
ஃபிரான்ஸின் முன்னாள் பிரதமர் ஃபிரான்கோய்ஸ் ஃபில்லன் (Francois Fillon) மற்றும் அவரது மனைவிக்கு சிறைத்தண்டனை விதித்து பாரிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஃபில்லனின் நாடாளுமன்ற உதவியாளராக அவரது மனைவி பணி புரிந்ததாக போலியாக கணக்கு காட்டப்பட்டதாகவும், அதன் மூலம் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்க்கு மேல் அரசுப் பணம் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய பாரிஸ் நீதிமன்றம், இருவருக்கும் சிறை தண்டனையும், மூன்று கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.Also read... தாய்- தந்தை கொரோனாவால் உயிரிழப்பு... தவிக்கும் மூளை வளர்ச்சி குன்றிய மகன்

மேலும் சம்பளமாகப் பெற்ற 8 கோடி ரூபாயையும் அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஃபில்லன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் நிலவியது. ஆனால் இந்த மோசடி குறித்த தகவல் வெளியானதால் இமானுவேல் மேக்ரன் வெற்றி பெற்றார்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading