ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் உடன் தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் நகரை கைப்பற்றியதை தொடர்ந்து மொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் வசம் ஆகியுள்ளது. இந்நிலையில், தாலிபான்கள் கைகளில் ஆப்கானிஸ்தானை வந்ததையடுத்து முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மூட்டை மூட்டையாக பணத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர் கஜகஸ்தானுக்கு தப்பியோடி இருக்கலாம் என்று தகவல் வெளியானது. எனினும் அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என்று கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
இதையும் படிங்க: அஷ்ரப் கனியை கைது செய்ய இண்டர்போலுக்கு கோரிக்கை வைத்த ஆப்கன் தூதரகம்!
இந்நிலையில்,தாலிபான் தளபதியும் ஹக்கானி தீவிரவாத குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தாலிபான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக இந்த சந்திப்பில் பேசப்படலாம் என்று கூறப்படுகிறது. முந்தைய அரசின் முக்கிய அமைதித் தூதுவரான அப்துல்லா அப்துல்லாவும் இந்த கூட்டத்தில் ஹமீத் கர்சாய் உடன் இருந்தார் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ஆப்கானிஸ்தானில் மீண்டும் பள்ளிக்கு செல்ல தொடங்கிய சிறுமிகள்!
இதனிடையே, ஹமீத் கர்சாயை தொடர்பு கொண்டு பேசியதாகவும் ஆப்கானிஸ்தானில் நிகழும் நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்ததாகவும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் முந்தைய ஆட்சி அகற்றப்பட்டதை தொடர்ந்து ஹமீத் கர்சாய் அதிபராக பதவியேற்றார். 2014ம் ஆண்டு வரை அவர் ஆட்சியில் இருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.